இனி அக்கவுண்ட் இல்லாதவர்களும் ரூ.50,000 வரை பணம் அனுப்பலாம்! பணம் பெறலாம்! RBI-யின் புதிய விதிமுறை!

இதுவரையில் வங்கி கணக்கு இருந்தால் மட்டும் தான் பிறருக்கு பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும். ஆனால் இனி அதற்கு அவசியமில்லை. வங்கி கணக்கு இல்லாத வாடிக்கையாளர்களும் எளிதில் பணம் அனுப்பும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

டொமஸ்டிக் மணி டிரான்ஸ்பர் டைரக்ஷன்ஸ் 2026-இன் கீழ் பிராந்திய கிராமப்புற வங்கிகள், நகர்ப்புற வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகளிலும் இனி அக்கவுண்ட் இல்லாதவர்களும் பணம் அனுப்பலாம், பணம் பெறலாம். உள்நாட்டு பண பரிவர்த்தனை சேவையை எளிதாக்கும் வகையில் இந்த விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.

இனி அக்கவுண்ட் இல்லாதவர்களும் ரூ.50,000 வரை பணம் அனுப்பலாம்! பணம் பெறலாம்! RBI-யின் புதிய விதிமுறை!

பணம் பெரும் சேவை: வங்கி கணக்கு இல்லாத நபர்களும் இனி எளிதில் பணம் பெற முடியும். இதற்காக "கேஷ் பே அவுட் சர்வீஸ்" எனும் சேவையை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. வங்கி கணக்கு வைத்திருக்கும் நபர்கள் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு.. தங்கள் கணக்குக்கு பணத்தை அனுப்பச் சொல்லி எடுத்துக் கொடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

ஏடிஎம் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட கட்டண முறைகள் மூலம் ரொக்கமாக பெற்றுக்கொள்ளலாம். பணத்தை பெறுவதற்கு வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி குறித்த விவரங்களை கட்டாயம் அந்தந்த வங்கிகள் பராமரிக்க வேண்டும். மேலும் இந்த சேவையின் கீழ் ஒரு முறை பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.10,000 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல ஒரு மாதத்திற்கு ரூ. 25,000 வரை வங்கி கணக்கு இல்லாமல் பணம் பெற முடியும்.

Also Read

பணம் அனுப்பும் சேவை: வங்கி கணக்கு இல்லாத நபர்கள் மற்றவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும் "கேஷ் பே இன் சர்விஸ்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கு இல்லாத நபர்கள் நேரடியாக வங்கி கிளைக்கு சென்று NEFT மூலம் பயனாளியின் கணக்கில் டெபாசிட் செய்யலாம். இதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.50,000 வரை வரம்பு உள்ளது. அதேபோல ஏடிஎம்ம்கள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் பணம் அனுப்புவதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை அனுமதி உண்டு. அதே போல ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.25,000 வரை பணம் அனுப்பலாம்.

இந்த சேவையை பயன்படுத்துவது எப்படி?: பணம் அனுப்புபவர்கள் தங்களுடைய மொபைல் நம்பர், அரசு அடையாள ஆவணம்.. உதாரணமாக ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசாங்க ஆவணத்தில் கையெழுத்து போட்டு வங்கிகளில் கொடுத்து பதிவு செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பும் போது பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஓடிபி சரிபார்ப்பு போன்றவற்றை கட்டாயம் செய்திருக்க வேண்டும்.

அதேபோல வருமான வரி விதிகளையும் வங்கிகள் பின்பற்ற வேண்டும். பணம் அனுப்புபவரின் விபரங்களை பதிவு செய்து.. அது நேரடியாக பணம் கொடுத்து அனுப்பப்படும் பரிவர்த்தனை என்பதையும் வங்கிகள் தெளிவாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். இந்த புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+