சமூக வலைதளமான ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 30 வயதை எட்டுவதற்கு முன்பே ரூ.1 கோடி நிகர மதிப்பு என்ற மைல்கல்லை எட்டிய இளம் தம்பதியினர் குறித்த பேச்சுத்தான் தற்போது சோஷியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.
கணவருக்கு 29 வயதாகும் நிலையில், மனைவிக்கு 31 வயதாகிறது. இந்த தம்பதியினர், கடந்த செப்டம்பர் மாதம் தான் ரூ.1 கோடி என்ற சொத்து மதிப்பை அடைந்துள்ளனர். 2026ஆம் ஆண்டை வைத்து இவர்கள் பணியாற்றி வந்தாலும், முன்கூட்டியே இலக்கை அடைந்துள்ளனர்.

இவர்களின் வெற்றிக்கு அதிக சம்பள உயர்வோ, முதலீடுகளோ, அல்லது ஆடம்பர வாழ்க்கையை முழுமையாக தியாகம் செய்வதோ அல்ல. மாறாக, தொடர்ச்சியான சேமிப்பு, சிக்கனமான அணுகுமுறை ஆகியவையே இவர்களின் இலக்கை நிறைவேற முக்கிய காரணமாக இருந்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில், தொடங்கிய இவர்களது பயணத்தின்போது, இவர்களின் நிகர மதிப்பு ரூ.20 லட்சமாக மட்டுமே இருந்தது. ஆரம்ப ஆண்டுகளில் தங்கள் ஆண்டுச் செலவை ரூ.6 லட்சத்திற்குள் வைத்திருந்தனர். வருமானத்தில் ஏற்படும் வளர்ச்சியை பெரும்பாலும் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையே, இவர்கள் ஆண்டுக்கு 2 முதல் 3 உள்நாட்டு பயணங்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், இவர்கள் நிர்ணயித்த பட்ஜெட்டுக்குள் இருந்தனர். கடந்தாண்டு (2024) இருவருக்கும் ஒரு குழந்தை பெற்றெடுத்தப் பிறகும் இவர்களின் ஆண்டுச் செலவு ரூ.14 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இவர்களின் மாத சம்பளம் சுமார் ரூ.2.6 முதல் ரூ.2.8 லட்சம் வரை உள்ளது. இவர்களுக்கு இ.எம்.ஐ. எதுவும் இல்லை. அதேபோல், சாதாரண கார் தான் வைத்துள்ளனர். இவர்கள் தங்கியிருக்கும் குடியிருக்கு வாடகை செலவு மட்டுமே ஆண்டுக்கு ரூ.3 லட்சம் ஆகிறது.
ரூ.1.1 கோடி நிகர மதிப்பின் விவரம் : மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், ETF-களில் ரூ.41 லட்சம், பிபிஎஃப் மற்றும் கடன் முதலீடுகளில் ரூ.17 லட்சம், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ரூ.14.8 லட்சம், வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.6.6 லட்சம், தங்கம் மற்றும் வெள்ளியில் ரூ.6.5 லட்சம், பண இருப்பு சுமார் ரூ.15 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியின் முன்னோர்கள் சொத்துக்களையோ அல்லது சொந்தமாக வீடு எதையும் வைத்திருக்கவில்லை. அதேபோல், இவர்கள் ரூ.1.5 கோடி மதிப்புள்ள மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டையும் வைத்துள்ளனர்.
இந்நிலையில், தற்போதைய தங்கம் விலை உயர்வு காரணமாக இவர்களின் இலக்கு முன்னதாகவே ரூ.1 கோடியை எட்டியுள்ளது. இவர்களின் அடுத்த இலக்கு குறித்து ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், தங்கள் முதலீட்டுப் பிரிவில் சமநிலையைக் கொண்டு வர, பங்குகளில் உள்ள முதலீட்டை 45% இல் இருந்து 60% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்த தம்பதியினர் கூறுகையில், "நாங்கள் ஒன்றும் சிக்கனவாதிகள் அல்ல. வாழ்க்கையை ரசிக்கிறோம், பல இடங்களுக்கு பயணிக்கிறோம், பண்டிகைகளை கொண்டாடுகிறோம். அடுத்த 7 முதல் 9 ஆண்டுகளுக்குள் ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை நிகர மதிப்பு கொண்டு வருவதே எங்கள் இலக்கு" என்று தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications