சிஇஓ-ன்னா கொம்பா.. எலான் மஸ்க்-ஐ விளாசும் அமெரிக்க அரசு அமைப்பு..!

உலகின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை வாங்கிய பின்பு முதல் முறையாக டிவிட்டர் ஊழியர்களிடம் பேசிய அவர் அனைவரையும் பயமுறுத்தியுள்ளார்.

எலான் மஸ்க் டிவிட்டர் ஊழியர்கள் உடனான முதல் சந்திப்பில், டிவிட்டர் விரைவில் புதிய மற்றும் அதிகப்படியான வருவாய் ஈட்ட துவங்கவில்லை எனில் திவாலாகும் வாய்ப்பு உள்ளது எனப் பேசியுள்ளார்.

இதே நேரத்தில் டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் ஆதரவாளராக இருந்த டிவிட்டர் உயர் அதிகாரி உட்பட, அமெரிக்க அரசு பயப்படும் வகையில் முக்கியப் பிரிவின் அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் அமெரிக்க அரசு அமைப்பு டிவிட்டரை கண்காணிப்பில் வைக்க முடிவு செய்துள்ளது

டிவிட்டர்

டிவிட்டர்

வியாழக்கிழமை டிவிட்டர் நிறுவனத்தின் முக்கிய பாதுகாப்பு நிர்வாகிகள் தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால், எலான் மஸ்க் தலைமையிலான டிவிட்டரின் எதிர்காலம் குழப்பத்தில் சென்றுள்ளது மட்டும் அல்லாமல், அமெரிக்க அரசு கட்டுப்பாட்டு அமைப்புகளின் எச்சரிக்கைகளை எதிர்கொண்டு உள்ளது.

லியா கிஸ்னர்

லியா கிஸ்னர்

டிவிட்டரை விட்டு வெளியேற மிகவும் கடினமான முடிவை நான் எடுத்துள்ளேன் என்று தலைமை பாதுகாப்பு அதிகாரி லியா கிஸ்னர் ட்வீட் செய்துள்ளார். லியா கிஸ்னர் பிற முக்கிய பாதுகாப்பு நிர்வாகிகளுடன் விலகியது குறிப்பிடத்தக்கது.

பிற முக்கிய அதிகாரி

பிற முக்கிய அதிகாரி

எலான் மஸ்க்-ன் விளம்பரதாரர்களுக்கான content moderation policy-ஐ ஆதரித்துப் பேசிய அடுத்த நாளிலேயே இத்தளத்தின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புத் தலைவரான Yoel Roth பதவி விலகினார். இதேபோல் டிவிட்டரை கைப்பற்றுவதற்கு முன்னரே நிறுவனத்திற்குள் முக்கிய மஸ் கூட்டாளியாகவும், டிவிட்டர் - விளம்பரதாரர்கள் மத்தியிலான இணைப்பதில் முக்கிய பங்காற்றியவர் ராபின் வீலர் இவரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ப்ளூ டிக்

ப்ளூ டிக்

எலான் மஸ்க் டிவிட்டர் யூசர்களுக்கு ப்ளூ டிக் சந்தா சேவையை வெளியிட்ட நாளில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது. டிவிட்டர் நிறுவனத்தின் யூசர்கள் ப்ளூ டிக் பெற மாதத்திற்கு 7.99 டாலர் அளவிலான தொகையைச் சந்தா-வாகச் செலுத்த வேண்டும்.

GREY BADGE திட்டம்

GREY BADGE திட்டம்

இதேபோல் உயர்மட்ட கணக்குகளுக்கு அதாவது பிரலங்களின் கணக்குகளுக்குத் தனியார் GREY BADGE அளிக்கும் திட்டத்தை அறிவித்து அடுத்த சில மணிநேரத்திலேயே திரும்பப் பெற்றார். இது கூடுதல் கவலையை அளித்துள்ளது.

பல மோசடி கணக்குகள்

பல மோசடி கணக்குகள்

இதற்கு முக்கியக் காரணம் மோசடியாளர்கள் இந்த 8 டாலர் கொடுத்து ப்ளூ டிக் வாங்கலாம் என்றால் பிரபலங்கள் பெயரிலும், அரசியல் தலைவர்கள் பெயரிலும் டிவிட்டர் கணக்கைத் திறந்து ப்ளூ டிக் வாங்க வாய்ப்பு உள்ளது. இதனால் பிரபலங்கள் பெயரில் அதிகப்படியான போலி கணக்குகள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

டிவிட்டர் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் கொள்கை பிரிவு அதிகாரிகள் வெளியேறிய நிலையில் டிவிட்டர் நிறுவனம் இதுவரையில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை மீறல்களைச் செய்துள்ளதா என்பதைக் கண்காணித்த நுகர்வோர் பாதுகாப்பை மேற்பார்வையிடும் அமெரிக்க அரசு அமைப்பான பெடரல் டிரேட் கமிஷனிடமிருந்து டிவிட்டருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

 பெடரல் டிரேட் கமிஷன்

பெடரல் டிரேட் கமிஷன்

இதுகுறித்து பெடரல் டிரேட் கமிஷன் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், டிவிட்டரில் நிறுவனத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை எங்களுக்கு ஆழ்ந்த கவலையை அளித்த காரணத்தால் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி

தலைமை நிர்வாக அதிகாரி

மேலும் எந்தத் தலைமை நிர்வாக அதிகாரியும் அல்லது நிறுவனமும் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல, மேலும் நிறுவனங்கள் எங்கள் ஒப்புதல் ஆணைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பெடரல் டிரேட் கமிஷனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தனியுரிமை விதிகள்

தனியுரிமை விதிகள்

அமெரிக்கத் தனியுரிமை விதிகளுக்குக் கீழ்ப்படிய டிவிட்டர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதைப் பின்பற்றுகிறதாக என்பதை உறுதி செய்யப்பட வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளது. எலான் மஸ்க் content moderation கொள்கை உட்படப் பலவற்றும் மாற்றப்பட்டு உள்ளது. இதில் ஏதேனும் விதிமுறை மீறல் உள்ளதாக என்பதைக் கண்டறிய வேண்டும்.

அபராதம்

அபராதம்

பெடரல் டிரேட் கமிஷன் முடிவுகளையும், விதிமுறைகளையும் மீறினால் டிவிட்டருக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். இது டிவிட்டருக்கு தற்போதைய காலகட்டத்தில் பெரும் சுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+