பெட்ரோல், டீசல் விலை 18-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி சர்வதேச சந்தையினை பொறுத்து தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றோடு 18 தினங்களாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பது, மிக ஆறுதல் தரக்கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
விலை அதிகரிக்குமோ?
கடந்த பிப்ரவரி 27 அன்று பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், இன்று வரையில் மாற்றம் செய்யப்படவில்லை. சமீபத்திய வாரங்களில் சில நகரங்களில் பெட்ரோல் விலையானது 100 ரூபாயினை எட்டியது. இது இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமே நிலவி வந்தது. ஏனெனில் ஒபெக் நாடுகள் தற்போது கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பல நாடுகளும் மீண்டு வந்து கொண்டுள்ளன.
உற்பத்தி குறைப்பு
அதே நேரம் தேவையும் மீண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால் ஓபெக் நாடுகளோ ஏற்கனவே உற்பத்தியினை வெகுவாக குறைத்துள்ள நிலையில், அதனை இன்னும் ஓரிரு மாதங்களுக்கு தொடர விரும்புவதாக கூறி வருகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட்டு வந்தது. எனினும் தற்போது இரண்டாம் கட்ட பரவலானது மிக வேகமெடுத்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் தேவை மீண்டும் குறையலாமோ என்ற அச்சமும் உற்பத்தியாளர்களிடையே நிலவி வருகின்றது.
மத்திய மாநில அரசுகளின் வரி விகிதம்
இதற்கிடையில் சர்வதேச சந்தையில் விலை குறைந்தாலும், அதன் முழு பலனையும் அரசு எடுத்துக் கொள்ளும் விதமாக, இந்தியாவில் வரி விகிதம் அதிகரிக்கப்படுகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் எண்ணெய் விலை குறைவின் பலனை எடுத்துக் கொள்ள, பெட்ரோல் லிட்டருக்கு 19.98 ரூபாயாக இருந்த வரி விகிதத்தினை, 32.98 ரூபாயாக அதிகரித்தது.
மூன்று இலக்கத்தில் பெட்ரோல் விலை
இதே டீசலின் வரி விகிதத்தினை லிட்டருக்கு 15.83 ரூபாயில் இருந்து 31.83 ரூபாயாக அதிகரித்தது. அந்த சமயத்தில் பல மாநில அரசுகளும் வாட் வரியை அதிகரித்தன. ஆக இதன் எதிரொலியாக கடந்த பிப்ரவரி மாதத்தில் பெட்ரோல் விலை மூன்று இலக்கினை எட்டியது.
என்ன காரணம்?
இதற்கிடையில் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வந்தால், விலை சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது குறித்து நிர்மலா சீதாராமன், பெட்ரோல், டீசல் விலை, இயற்கை எரிவாயு ஆகியவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வர எந்தவிதமான அறிக்கையும் சமர்பிக்கப்படவில்லை என கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் இந்த 18 நாட்கள் விலை மாற்றமின்மை என்பது, சில மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரபவிருப்பதால் இருக்கலாமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இன்று விலை நிலவரம் என்ன?
டெல்லியில் பெட்ரோல் விலை - ரூ.91.17
மும்பையில் பெட்ரோல் விலை - ரூ.97.57
சென்னையில் பெட்ரோல் விலை - ரூ.93.11
பெங்களூரில் பெட்ரோல் விலை - ரூ.94.22
ஹைத்ராபாத்தில் பெட்ரோல் விலை - ரூ.94.79
டெல்லியில் டீசல் விலை - ரூ.81.47
மும்பையில் டீசல் விலை - ரூ.88.60
சென்னையில் டீசல் விலை - ரூ.86.45
பெங்களூரில் டீசல் விலை - ரூ.86.37
ஹைத்ராபாத்தில் டீசல் விலை - ரூ.88.86
உங்கள் கருத்து என்ன? எங்களோடு பகிருங்கள்


Click it and Unblock the Notifications