அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போரை ராணுவ தாக்குதல் மூலம் அல்லாமல் பொருளாதார, வர்த்தக தடைகள் மூலம் ஈரானை முடக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் முதல் ஆக்ஷனாக, உலக நாடுகள் இனி ஈரான் விமானங்களுக்கு எவ்விதமான சேவையும், உதவியும் செய்யக்கூடாது என அமெரிக்க கருவூல அமைப்பின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஈரானின் முக்கிய நடப்பு நாடாக சீனாவுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஸ்காட் பெசென்ட் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகளாவிய விமான நிலையங்கள், நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் ஈரான் விமானங்களுக்கும், ஈரான் விமான நிறுவனங்களுக்கும் எவ்விதமான உதவியும் செய்யக்கூடாது என தெரிவித்துள்ளது.

அதாவது ஈரான் விமானங்களுக்கு எரிபொருள் உதவி, விமானங்களுக்கு லேண்டிங் மற்றும் டேக்ஆஃப் சேவைகள், ஈரான் விமானங்களுக்கு டிக்கெட் விற்பனை சேவை என எதுவும் வழங்கக்கூடாது என அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகள் மூலம் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளது என ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 23ஆம் தேதிக்கு பின்பு ஈரான் விமானங்களுக்கு ஏதேனும் சேவை அளித்தால் அந்த நாட்டை அமெரிக்காவின் டாலர் நிதி பரிமாற்ற சந்தையில் இருந்து தடை செய்யப்படும் என ஸ்காட் பெசென்ட் எச்சரித்துள்ளார்.
உலகளவில் பெரும்பாலான நிதி பரிமாற்றங்கள் அனைத்தைும் டாலரில் வாயிலாக மட்டுமே நிதி பரிமாற்றம் செய்யப்படும் வேளையில், இந்த அமைப்பில் இருந்து தடை செய்யப்பட்டால் உலக நாடுகளுடனான தொடர்பை இழப்பது போன்றாகிவிடும். இதை அடிப்படையாக கொண்டே டிரம்ப் அரசு ஈரான் மீது மிக கடுமையான பொருளாதார தடையை விதித்துள்ளது.
ஸ்காட் பெசென்ட் தனது அறிவிப்பில் ஈரானுடன் மிகவும் நெருக்கமான நட்புறவை கொண்டு இருக்கும் சீனா இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இணங்கி நடக்கும் என தெரிவித்தார். இந்த அறிவிப்பை ஸ்காட் பெசென்ட் சீனாவின் துணை தலைவர் He Lifeng மற்றும் சீனாவின் மத்திய வங்கியான People's Bank of China கவர்னர் Pan Gongsheng ஆகியோரை சந்தித்த பின்பு தெரிவித்துள்ளார்.
மேலும் சீனா உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த பின்பு ஸ்காட் பெசென்ட் செய்தியாளர்களிடம் பேசிய போது ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்க எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகளில் சீன ஒத்துழைப்பு அளித்து வருகிறது என தெரிவித்தார்.
இதன் மூலம் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் ஈரான் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் பறக்க முடியாமல் முடங்க கூடும்.


Click it and Unblock the Notifications
