எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் உணவகங்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்திற்கு சிலிண்டர் முன்பதிவு செய்தும் தங்களுக்கு இதுவரை டெலிவரி செய்யப்படவில்லை என ஏராளமான மக்கள் காலி சிலிண்டர்களோடு ஏஜென்சிகளை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க தங்களுக்கு சிலிண்டர் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஏராளமானவர்கள் தங்களிடம் இருப்பு இருந்தாலும் மற்றொரு சிலிண்டருக்காக முன்பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர்.
இது நாடு முழுவதும் ஒரு விதமான பதட்டமான சூழலை உண்டாக்குகிறது. இந்த சூழலில் தான் நாட்டின் சிலிண்டர் இருப்பு குறித்து மத்திய அரசு செய்தியாளர் சந்திப்பின் மூலம் முக்கியமான முக்கியமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறது. மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இந்தியாவில் போதுமான அளவு கச்சா எண்ணெய் இருப்பு இருக்கிறது, நம் நாட்டில் இருக்கக்கூடிய சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் செயல்பட்டு வருகின்றன எனக் கூறினார். எந்த இடத்திலும் எந்த ஒரு பெட்ரோல் நிலையத்திலும் ஸ்டாக் இல்லை என இதுவரை அறிவிக்கப்படவில்லை. நம் நாட்டில் போதுமான அளவு பெட்ரோலும் டீசலும் இருப்பு இருக்கிறது என கூறுகிறார். ஒட்டுமொத்த நாட்டின் தேவைக்கான பெட்ரோலையும் டீசலையும் உள்நாட்டிலேயே நாம் தயாரித்து பயன்படுத்தி வருகிறோம் என அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இயற்கை எரிவாயு பொருத்தவரை எங்கெல்லாம் எல்பிஜி இணைப்பு கிடைக்காமல் வணிக ரீதியிலான நுகர்வோர் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு பிஎன்ஜி இணைப்பு தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என கூறினார். இது தொடர்பாக கெயில் நிறுவனம் பல்வேறு துறை அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தியது. தற்போது வணிக ரீதியிலான சிலிண்டர் கிடைக்காத நுகர்வோர்களுக்கு பி என் ஜி இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என தெரிவித்தார்.

தற்போதுள்ள இந்த புவிசார் பதற்ற சூழலுக்கு மத்தியில் அரசு எல்பிஜி சப்ளைக்கு தான் முன்னுரிமை தருகிறது என கூறுகிய அவர் எந்த இடத்திலும் ஸ்டாக் அவுட் என்ற பிரச்சனை இதுவரை வரவில்லை என தெரிவித்தார். பொதுமக்கள் பதற்றம் அடைந்து வழக்கத்தை விட அதிகமாக சிலிண்டர் முன் பதிவு செய்வதே இந்த நிலைமைக்கு காரணம் என தெரிவித்தார். வழக்கமாக நேற்று வரை 7.5 மில்லியன் புக்கிங் வந்திருந்த நிலையில் இன்று 8.8 மில்லியன் புக்கிங்களாக உயர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போதைக்கு எல்பிஜி கட்டுப்பாடு இல்லை எனவும் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் அவர் கூறினார். கப்பல் போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரி ராஜேஷ் குமார் சின்ஹா அளித்த பேட்டியில் வளைகுடா நாடுகளில் இருக்கக்கூடிய இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருக்கின்றனர் எனக் குறிப்பிட்டார். இந்தியாவுக்கு 2 கப்பல்கள் எல்பிஜி ஏற்றி கொண்டு ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்ட அவர், இந்த கப்பல்கள் மூலம் 92 , 700 மெட்ரிக் டன் எல்பிஜி இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது, வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கப்பல்களும் இந்தியா வந்தடையும் என்றார்.
More From GoodReturns

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!



Click it and Unblock the Notifications