டெல்லி: இந்தியாவில் குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் அவர்கள் ஈட்டும் வருவாய்க்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமையாகக் கருதப்படுகின்றது.
ஒருவர் செலுத்த வேண்டிய வரி அளவு என்பது நமது நாட்டின் வருமான வரி அடுக்கைப் பொருத்து மாறுபடுகின்றது. வருமான வரி அடுக்கு என்பது நமது நாட்டின் மத்திய நிதி அமைச்சரால் தீர்மானிக்கப்படுகின்றது. நமது நாட்டைப் பொருத்த வரை ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் வருமான வரி அடுக்கு அறிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட்டின் போது, வருமான வரி வரம்பு அதிகரிக்காதா என்கிற ஏக்கம் ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் எழுகின்றது. அப்படி இருக்கும் பொழுது வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு மாநிலம் இந்தியாவில் உள்ளது என்பது உங்களுக்கு ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும்.
சிக்கிம் மாநிலம்
இயற்கை அன்னையின் மடியில், இமய மலையின் சாரலில் அழகிய அல்பைன் புல்வெளிகள், நீல மற்றும் பச்சை வண்ண மலைகள், பனிப்பாறைகள் மற்றும் காட்டுப்பூக்கள் ஆகியவற்றின் தாயகமாக அமைந்துள்ள ஒரு பூலோக சொர்க்கமாகச் சிக்கிம் மாநிலம் அமைந்துள்ளது.
6.74 லட்சம் மக்கள்
இது இந்தியாவின் வட கிழக்கே அமைந்துள்ள மிகச் சிறந்த மாநிலமாகும். சிக்கிம் மாநிலத்தில் சுமார் 6.74 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு வருமான வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி
சிக்கிம் மக்கள் ஏன் வருமான வரி கட்ட வேண்டிய அவசியமில்லை?
இந்தியாவின் வடகிழக்கே உள்ள மிகச் சிறிய மலைப்பாங்கான மாநிலம் சிக்கிம். இதன் வடக்கு மற்றும் வடகிழக்கில் திபெத், கிழக்கில் பூட்டான், மேற்கில் நேபாளம் மற்றும் தெற்கில் மேற்கு வங்காளம் ஆகியன உள்ளன. பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு அழகிய அரசாங்கமாகச் சிக்கிம் இருந்தது.
இந்திய சுதந்திரம்
இந்திய சுதந்திரத்தின் பொழுது, பழைய சிக்கிம் அரசின் சட்டங்கள் அப்படியே தொடரும் என்கின்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனை நிறைவேற்றும் பொருட்டு இந்திய அரசியலமைப்பில் 371 (எஃப்) என்கின்ற சிறப்பு அந்தஸ்து உருவாக்கப்பட்டது.
கண்டிஷன்
இதன் காரணமாகவே சிக்கிம் மாநிலம் தன்னுடைய 1948 ம் ஆண்டு வருமான வரிக் கையேட்டை பின்பற்றியது. இந்த வரிக் கையேட்டின் கீழ், சிக்கிம் மாநில மக்கள் மத்திய அரசிற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
மத்திய அரசு
சிக்கிம் மாநில வரிச் சட்டங்கள், மத்திய அரசால் 2008ம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டன. அதற்குப் பதில் அங்கு மத்திய நிதிப் பிரிவு சட்டம் 10 (26AAA) செயல்படுத்தப் பட்டது. இந்த அறிவிப்பின் படி சிக்கிம் மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு வரிச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை அனைத்தும், பூர்வ குடிமக்களுக்கு மட்டும் தான்.
பான் கார்டு
இதன் காரணமாகவே இந்த மாநிலத்தில் வசிப்பவர்களுக்குப் பான் கார்டும் தேவைப்படுவதில்லை. அதோடு மட்டுமல்ல, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளரான SEBI, சிக்கிம் மாநில மக்களுக்கு இந்திய பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடு செய்வதற்கு, பான் கார்டு அவசியம் என்கின்ற விதியிலிருந்தும் விலக்கு அளித்துள்ளது.
Chogyal புத்த மதகுரு
சிக்கிம் மாநிலம், Chogyal எனப்படும் புத்த மதகுருவால் ஆளப்பட்டது. இது 1890 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவின் சமஸ்தானமாக மாறியது. 1947 க்குப் பிறகு, சிக்கிம் இந்தியக் குடியரசுடன் அதனுடைய தனித்தன்மை மாறாமல் இணைந்தது.
மக்கள் கிளர்ச்சி
இமயமலைச் சாரலில் உள்ள மாநிலங்களிலேயே அதிகக் கல்வியறிவு விகிதத்தையும் தனிநபர் வருமானத்தையும் சிக்கிம் பெற்றுள்ளது. 1973 இல், Chogyal அரண்மனைக்கு முன்னால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
மன்னராட்சி டூ மக்களாச்சி
இதன் தொடர்ச்சியாக 1975 இல் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பின் பயனாக, மன்னராட்சி அகற்றப்பட்டு, மக்களாச்சி ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 1975 இல் சிக்கிம் இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.
மொழிகள்
சிக்கிம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், நேபாளி, சிக்கிமீஸ் மற்றும் லெப்சா ஆகியன உள்ளன. மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொருட்டுக் குருங், லிம்பு, மாகர், முகியா, நெவாரி, ராய், ஷெர்பா மற்றும் தமாங் ஆகியன கூடுதல் அதிகாரப்பூர்வ மொழிகளாக இங்கு விளங்குகின்றன.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications