மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமான வரி விதிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த புதிய வருமான வரி முறையின் கீழ் வரி விலக்கு வரம்பை ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தி நிர்ணயித்துள்ளார். இதனால் எத்தனை பேர் பலன் பெறுவார்கள் என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
புதிய வருமான வரி முறையின் கீழ் ஏற்கனவே இருந்த டாக்ஸ் ரிபேட் முறையில் 7 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு இருந்து, இதை தற்போது 12 லட்சமாக உயர்த்திய உடன் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். இதன் மூலம் சுமார் 1 கோடி பேருக்கு வரிச்சுமை குறையும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பிரிவு 87A இன் கீழ் வரி செலுத்துவோர்களுக்கு கிடைக்கும் நிலையான வரி விலக்கு ரூ.75,000 ஆகும். எனவே, வரி செலுத்துவோர்கள் ரூ.12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பது தான் இன்றைய அறிவிப்பின் அடிப்படை.
டாக்ஸ் ரிபேட் அளவை 7.75 லட்சத்தில் இருந்து 12.75 லட்சம் என 5 லட்சம் ரூபாய்க்கு விலக்கு அளிக்கப்படுவது என்பது மிகப்பெரிய விஷயம், 12.75 லட்சம் ரூபாய்க்கு மேல் 1000 ரூபாய் அதிமாக சம்பாதித்தாலும் அனைத்து பலகையின் கீழ் வருமான வரி செலுத்த வேண்டும்.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமான வரி துறை தற்போது ஏஐ, டேட்டா இன்டலிஜென்ஸ் என பல புதிய தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் காரணத்தால் இந்த வருமான வரி மாற்றம் எத்தனை பேருக்கு நேரடியான பலன் அளிக்கும் என்பதை துள்ளியமாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தப்பட்ட முறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி விகிதம் பொருந்தும். வருமானம் ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால் 10% வரி விகிதமும், ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை இருந்தால் 15% வரி விகிதமும், ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை இருந்தால் 20% வரி விகிதமும் பொருந்தும். ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் ரூ.24 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்கள் 25% வரி விகிதத்திற்கு உட்படுத்தப்படுவார்கள். ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 30% என்ற அதிகபட்ச வரி விகிதம் பொருந்தும்.
இருப்பினும், வரி விதிக்கத்தக்க மொத்த வருமானம் ரூ.12 லட்சத்தை விட அதிகமாக இருந்தால், புதிய அல்லது பழைய வரி முறைகளில் எது தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வரித்தொகை நிர்ணயிக்கப்படும்.
இந்த நடவடிக்கை, பணவீக்கம் மற்றும் லிவ்விங் காஸ்ட் அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிவாரணம் அளிக்கும். மேலும், இந்த நடவடிக்கை மூலம் அரசு, நடுத்தர வர்க்கத்தின் நம்பிக்கையை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முயற்சிக்கிறது.


Click it and Unblock the Notifications