சீனாவில் பரவி வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், இது உலக நாடுகளில் மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இது எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் BF7 என்ற ரக வைரஸ் ஆனது ஒரு சில வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ரக வைரஸ் தான் சீனாவில் பரவி வரும் பெருந்தொற்று காரணம் என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய வைரஸ் எந்த அளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமே என்ற அச்சம் இருந்து வருகின்றது.
மாஸ்க் அணியுங்கள்
மத்திய அரசும் கூட்டமான இடங்களுக்கு மக்கள் செல்லும் போது கவனமுடன் பேஸ் மாஸ்க்குகளுடன் செல்ல அறிவுறுத்தியுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ் சீனா, இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென் மார்க் உள்ளிட்ட பல நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் பழைய படி உலக நாடுகள் பலவும் தங்கள் எல்லைகளை மூடுவது, லாக்டவுன் நடவடிக்கைக்குள் இறங்கலாமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் தாக்கம்
குறிப்பாக இந்தியாவில் அதன் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட லாக்டவுனில் இருந்து பொருளாதாரம், இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், இது இன்னும் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மத்திய அரசும் அதற்கேற்ப முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை
இதற்கிடையில் தான் இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர் அனில் கோயல், லாக்டவுன் பற்றிய முக்கிய அறிவிப்பினை கொடுத்துள்ளார். இந்தியாவில் 95% மக்கள் தடுப்பூசியினை போட்டுக் கொண்டுள்ளனர். ஆக இதனால் இந்தியாவில் லாக்டவுனை எதிர்கொள்ள வாய்ப்பில்லை, சீனர்களை விட இந்தியர்கள் அதிக எதிர்ப்பு சக்தி திறனை கொண்டவர்கள். ஆக இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
விழப்புணர்வுடன் இருக்க வேண்டும்
இந்த புதிய வகை வைரஸ் ஆல் குஜராத்தில் இருவரும், ஓடிசாவில் இருந்து ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் அரசு குஜராத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இருவரும் குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
அதேசமயம் மேற்கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது தங்களை பாதுகாத்துக் கொள்ள அவசியமான ஒன்றாக இருக்கும்.
லாக்டவுன்
லாக்டவுன் பற்றி பேசிய கோயல், இந்தியா கோவிட் அடிப்படைகளுக்கு மாற வேண்டும். சோதனை, சிகிச்சை மற்றும் டிரேசிங் என இருத்தல் அவசியம். 2022ம் ஆண்டில் அதிகளவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் இந்தியர்கள் அதிகம். பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிந்து கொள்ள அரசு வலியுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக விமான நிலையங்கள் போன்ற இடங்களை முடக்க வேண்டும்.
இது பயனுள்ளதாக அமையும்
சீனாவில் பரவி வரும் கொரோனா காரணமாக அந்த நாட்டு மக்களுக்கு சுகாதார வசதிகளை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள்,செவிழியர்கள் என மருத்துவ துறையினர் தொடர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இப்படியொரு சூழ்நிலையில் இந்தியாவில் வராமல் இருப்பது தான், மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் எந்த பிரச்சனையும் வாரம்ல் இருக்க பயனுள்ளதாக அமையும்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications