நிர்மலா சீதாராமன் அடித்த யூடர்ன்.. LTCG வரியெல்லாம் ரத்து கிடையாது.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் சோகம்

இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களுடைய முதலீட்டை வெளியேற்றி வந்த காரணத்தால், இதை தடுக்க மத்திய நிதியமைச்சர் LTCG வரியில் தளர்வு அளிக்கவோ அல்லது ரத்து செய்வது குறித்தோ ஆலோசனை செய்வதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இதற்கான ஆலோசனை, கருத்துக் கேட்பு பணிகள் பட்ஜெட்-க்கான ஆலோசனை கூட்டத்தில் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், நேற்று 2027-28 மத்திய பட்ஜெட்-க்கான முன்கூடிய ஆலோசனைக் கூட்டம் பொருளாதார வல்லுநர்களுடன் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.

நிர்மலா சீதாராமன் அடித்த யூடர்ன்.. LTCG வரியெல்லாம் ரத்து கிடையாது.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் சோகம்

இக்கூட்டத்தில் பொருளாதார வல்லுனர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம் ஈக்விட்டி முதலீடுகள் மீதான கேப்பிட்டல் கெயின்ஸ் வரியை நீக்க வேண்டாம் என பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது சந்தை முதலீட்டாளர்கள், ப்ரோகரேஜ், பன்னாட்டு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தாக உள்ளது.

Also Read

மத்திய நிதியமைச்சர் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டு தொடர்ந்து வெளியேறிய போது LTCG வரியைத் தளர்த்துவது குறித்து பேசினார், ஆனால் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு ஈரான் போரில் யூடர்ன், ஏஐ முதலீட்டில் யூடர்ன், அமெரிக்க நாடாளுமன்ற அதிகாரத்தில் யூடர்ன் ஆகியவற்றின் மூலம் இந்திய சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் துவங்கியிருக்கும் காரணத்தால் நிர்மலா சீதாராமன் நிலைப்பாட்டிலும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகள் அடிப்படையில் ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொகை 12 மாதங்களுக்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டு இருந்தால் இருந்தால் அதை விற்கும் போது 12.5 சதவீதம் என்ற LTCG வரி விதிக்கப்படுகிறது. இதுவே 12 மாதங்களுக்குக் குறைவாக இருக்கும் பட்சத்தில் STCG வரியாக 20 சதவீதம் விதிக்கப்படுகிறது. இதை தாண்டி STT வரியும் உள்ளது.

Recommended For You

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்குச்சந்தை முதலீடுகள் மீது விதிக்கப்படும் LTCG வரி விதிப்பு குறித்து கருத்து கேட்க உள்ளதாகத் தெரிவித்த பின்பு செபி மத்திய அரசுக்கு முக்கியமான பரிந்துரையை முன்வைத்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டின் மீது விதிக்கப்படும் LTCG வரி விதிப்பை ரத்து செய்வது மூலம் தளர்வு அளிப்பது போல் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில், தற்போது செய்யப்பட்டுள்ள மியூச்சுவல் பண்டு முதலீட்டை விற்றுவிட்டு அப்பணத்தை மீண்டும் புதிய பண்டுகளில் முதலீடு செய்யும் பட்சத்தில் LTCG வரி விதிப்பில் விலக்கு அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.

ஆனால் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் எதிர்பார்க்காத திருப்பம் ஏற்பட்டு உள்ளது, இக்கூட்டம் குறித்து மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் ரவி அகர்வால் கூறுகையில், 2027-28ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஈக்விட்டி முதலீட்டின் மீதான LTCG வரி விதிப்பு குறித்தும், வரி மாற்றங்கள் குறித்தும் தீவிரமாக ஆலோசனை மற்றும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+