சென்னை: உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இன்டர்நெட் கிடைக்கவில்லையா? நமக்குத் தேவையான நேரத்தில் இன்டர்நெட் கிடைக்கவில்லை என்றால் வெறுப்பாகத் தான் இருக்கும். எனவே நாம் நமது தினசரி டேட்டா முடிந்து விட்டது என்று எண்ணி, கூடுதல் டேட்டாவை பணம் செலுத்தி பெறுவோம். அவ்வாறு பெறுவதற்கு முன் உண்மையிலேயே நமது தினசரி டேட்டா முடிந்து விட்டதா என்பதை சரி பார்க்க வேண்டும். தினசரி டேட்டா முடியவில்லை என்றால் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலுக்கு நெட்வொர்க் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என்று அர்த்தம்.
உங்கள் மொபைலை ரீஸ்டார்ட் (restart) செய்யுங்கள்: இது உங்களுக்கு சாதாரணமாக தோன்றலாம், ஆனால் மொபைலை ரீஸ்டார்ட் செய்வதன் மூலம் உங்கள் இன்டர்நெட் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் சரியாகும். ஸ்விட்ச் ஆப் (switch off ) செய்து விட்டு ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு ஆன் செய்யவும். இதன் மூலம் தற்காலிகமாக குறைபாடுகளை நீக்கி நெட்வொர்க்கை பெற முடியும். உங்கள் மொபைலை நீங்கள் ரீஸ்டார்ட் (restart ) செய்ய விரும்பவில்லை என்றால், உங்கள் மொபைலில் உள்ள "aeroplane" மோடை ஆன் செய்து சிறிது நேரம் கழித்து ஆப் செய்யவும்.

உங்கள் மொபைல் மற்றும் ஆப்-பை அப்டேட் செய்யுங்கள்: உங்கள் மொபைலை நீங்கள் அப்டேட் செய்யவில்லை என்றால், இதுபோன்ற நெட்ஒர்க் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மொபைலை அப்டேட் செய்து புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது நல்லது. இது நெட்வொர்க் பிரச்சனைக்கு மட்டுமல்லாமல், உங்களுடைய மொபைலில் பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்தும். தொடர்ந்து அப்டேட்கள் ஏன் வருகிறது என்றால்.. அவற்றில் டெவலப்பர்கள் அதிக அளவிலான பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து வெளியிடுவதனால் தான். எனவே, இது போன்ற அப்டேட் உங்களை ஹேக்கர்கள் தொல்லையிலிருந்தும் விடுவிக்கும்.
கேச்-களை (Cache) கிளியர் செய்யவும்: PC-கள் மற்றும் லேப்டாப்களைப் போலவே, ஆப்ஸ் ( app) மற்றும் போன்களில் சேமிக்கப்படும் கேச்-கள் அதிகமாக இருந்தால், இன்டர்நெட்டின் வேகம் குறையும். முடிந்தவரை உங்கள் மொபைலில் தேவையில்லாத கேச்-களை டெலிட் (delete) செய்வது நல்லது. மேலும், தேவையில்லாத அப்ளிகேஷன்களை டெலிட் செய்வதனால், உங்களுடைய மொபைல் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் அதிகமாகும். இதனால் போனின் பெர்ஃபார்மன்ஸ் அதிகரித்து, பயன்படுத்தவும் எளிதாக இருக்கும். உங்கள் இன்டர்நெட்டுக்கு மட்டுமின்றி உங்கள் போனின் பெர்ஃபார்மன்ஸ்-ஐ அதிகரிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம்.
அப்ளிகேஷன்கள் எடுத்துக் கொள்ளும் டேட்டா மற்றும் பேக்ரவுண்ட் ஆப்-களைச் சரி பார்க்கவும்: அதிகமான டேட்டாக்களை உபயோகிப்பதனாலும், அதிக நேரம் மொபைலை பயன்படுத்துவதனாலும்,நெட்வொர்க்கின் வேகம் குறையும். இதிலும் ஒரு சில ஆப்-கள் அதிக டேட்டாவை பயன்படுத்துகிறது. இதன் காரணமாக, உங்கள் டேட்டா விரைவாக முடிந்துவிடும். எனவே இதுபோன்ற ஆப்-களை "data saver mode"-இல் பயன்படுத்தவும். இதன் மூலம் அந்த ஆப் குறைவாகவே டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளும்.
உங்கள் நெட்வொர்க் அமைப்புகளை ரீசெட் செய்யவும்: நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள உதவி குறிப்புகளை முயற்சித்தும்,நெட்வொர்க்கில் சிக்கல்கள் ஏற்பட்டால் உங்கள் நெட்வொர்க்கை ரீசெட் (reset) செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் மொபைலில் செட்டிங்ஸ்க்கு (settings) சென்று அதில் மெனுவை கிளிக் செய்யவும். அதில் சிஸ்டம் (system) உள் சென்று, ரீசெட் நெட்வொர்க் செட்டிங்ஸ் (reset network settings ) என்று குறிப்பிட்டு இருப்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் நெட்வொர்க் ரீசெட் செய்யப்படும். அதன்பின் நெட்வொர்க் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications