இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

ஐடி முதல் உற்பத்தி வரை, ஹோட்டல் முதல் பள்ளி வரையில் பல்வேறு வேலைகளை செயற்கை நுண்ணறிவு (AI) முற்றிலும் மாற்றிவிடும், மாற்றிக்கொண்டும் இருக்கிறது. ஆனால் இந்த AI வளர்ச்சியில் பெரும்பாலானோர் கவனிக்காத ஒரு முக்கிய பொருளாதார சிக்கல் உள்ளது.

ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் இணைந்தால் 100க்கு 90 வேலைகளை இயந்திரங்களால் செய்ய முடியும் என்ற நிலையில்.. மக்கள் அவர்கள் செய்யும் வேலைகளை இழப்பது போன்ற பிரச்சனை மட்டும் அல்லாமல்; வேலைகள் இல்லாமல் போனால் மக்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள், வருமானம் இல்லாவிட்டால் வர்த்தகம் என்னாகும், பொருளாதாரம் என்னாகும் என்ற கேள்வி தான் தற்போது மிகப்பெரியதாக உள்ளது.

ஒரு பொருளாதாரம் இயங்குவதற்கான அடிப்படை, உற்பத்தி மற்றும் நுகர்வு. ஆனால் AI அனைத்து வேலைகளையும் மாற்றி, மனித உழைப்பு இல்லாமல் பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தால், உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் அதே நேரத்தில், வேலை இல்லாத மக்களுக்கு வருமானம் இல்லாததால் அவர்கள் அந்த பொருட்களை வாங்க முடியாது.

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்

இதனால் 'அதிக உற்பத்தி - குறைந்த நுகர்வு' என்ற நிலை உருவாகி, பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் உள்ளது. இது உற்பத்தி குறைவால் அல்ல, விற்பனை செய்யவும், வாங்கவும் யாரும் இல்லாததால் ஏற்படும் பிரச்சனை.

இந்த சிக்கல் புதியது அல்ல. 1930களில் பொருளாதார நிபுணர் John Maynard Keynes தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 'technological unemployment' உருவாகும் என்று முன்கூட்டியே கணித்தார். அதாவது, இயந்திரங்கள் மனிதர்களின் வேலைகளை மாற்றும் நிலை. IT மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் இது ஒரு கட்டம் வரையிலான தாக்கத்தை ஏற்படுத்தினாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், இன்று AI வளர்ச்சியால் அந்த கணிப்பு முழுமையாக நிஜமாகும் நிலையில் உள்ளது.

AI துறையில் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தற்போது ஒரு முக்கிய கேள்வியை விவாதித்து வருகின்றனர்: வேலைகள் இல்லாமல் போனால் வருமானம் எப்படி உருவாகும்?

இதற்கான இரண்டு முக்கிய தீர்வுகள் உலகளவில் பேசப்படுகின்றன.

1. Universal Basic Income - அனைவருக்கும் அடிப்படை வருமானம்
இந்த முறைப்படி, அரசு AI நிறுவனங்களுக்கு வரி விதித்து அந்த பணத்தை மக்களிடம் பகிரும். இதன் மூலம் வேலை இல்லாவிட்டாலும் மக்கள் ஒரு அடிப்படை வருமானத்தை பெற முடியும்.

Sam Altman இந்த கருத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் உலகின் மிகப்பெரிய Universal Basic Income ஆய்வை நடத்தினார். இதில் 1,000 பேருக்கு மாதம் 1,000 டாலர் அளவில் மூன்று ஆண்டுகள் வழங்கப்பட்டது. இந்த மாதிரி முயற்சிகள் எதிர்கால பொருளாதார அமைப்பை உருவாக்கும் அடித்தளமாக பார்க்கப்படுகின்றன.

2. Universal Basic Ownership - சொத்து உரிமை பகிர்வு
இரண்டாவது தீர்வு இன்னும் வித்தியாசமானது. பணம் கொடுப்பதற்குப் பதிலாக, மக்களுக்கு நிறுவனங்களில் பங்கு உரிமை வழங்கப்படும்.

இதன் மூலம் மக்கள் நேரடி சம்பளம் பெறாமல், நிறுவன லாபத்தில் இருந்து டிவிடென்ட் பெறுவார்கள். ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைவர் Sam Altman உருவாக்கிய 'American Equity Fund' திட்டத்தின் மூலம் பெரிய நிறுவனங்கள் தங்களின் ஒரு பகுதியை பொதுமக்களுக்கு வழங்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முறை, மக்கள் 'ஊழியர்கள்' அல்ல, 'பங்குதாரர்கள்' ஆக மாறும் ஒரு புதிய பொருளாதார அமைப்பை உருவாக்கும்.

AI உலகில் புதிய வருமான முறை - 'Universal High Income'
எலான் மஸ்க் இந்த மாற்றத்தை 'Universal High Income' என குறிப்பிடுகிறார். AI மற்றும் ரோபோட்டுகள் அனைத்து உற்பத்தியையும் மேற்கொள்ளும் நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளில் பற்றாக்குறை இருக்காது.

அந்த சூழலில், மனிதர்களின் முக்கிய தேவை 'வருமானம்' அல்ல, 'வாழ்க்கையின் பொருள்' ஆக மாறும் என அவர் வலியுறுத்துகிறார்.

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்

வேலை - வருமானம் உறவு
பல நூற்றாண்டுகளாக 'வேலை செய்தால் வருமானம்' என்ற அடிப்படையில் இயங்கிய பொருளாதார அமைப்பு, AI வளர்ச்சியால் வருமானத்தின் அடிப்படை மாறப்போகிறது.

இனி வேலை செய்வது மட்டுமே வருமானத்தின் மூலமாக இருக்காது. அதற்கு பதிலாக, அரசின் ஆதரவு அல்லது நிறுவனங்களின் உரிமை பகிர்வு மூலம் வருமானம் கிடைக்கும் புதிய அமைப்பு உருவாகும்.

புதிய பயம்..
AI வேலைகளை மாற்றும் என்ற பயத்தை விட, அது உருவாக்கும் புதிய பொருளாதார அமைப்பை புரிந்து கொள்வது முக்கியம். வருமானம் உருவாகும் முறை மாறும் இந்த காலத்தில், உலகம் ஒரு பெரிய மாற்றத்திற்குள் நுழைகிறது.

இந்த மாற்றம் சவாலாக இருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும். மனிதர்களின் பங்கு வேலை செய்வதில் மட்டும் அல்ல, பொருளாதாரத்தின் உரிமையாளர்களாக மாறுவதிலும் இருக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+