வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய கான்டெக்ஸ்ட் கார்டு! எதுக்கு பயன்படுகிறது தெரியுமா? ரொம்ப யூஸ்ஃபுல்!

இன்றெல்லாம் வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்குவது சர்வசாதாரணமாகிவிட்டன. காரணமே இன்றி பல குரூப்களில் உங்களை சேர்த்து விடுகின்றனர் என்று நினைக்கும் நபரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது. குரூப் மெசேஜிங்கில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் "கான்டெக்ஸ்ட் கார்டு" (context card) என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்களுக்கு, நீங்கள் சேர்க்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப் பற்றிய அத்தியாவசிய விவரங்களை வழங்குகிறது.

குரூப் சாட்களில் பயனர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் "கான்டெக்ஸ்ட் கார்டு" என்ற புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் பயனர்களுக்கு அவர்கள் சேர்க்கப்படும் குரூப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்கும். குறிப்பாக தெரியாத நபர்கள் உங்களை குரூப் சாட்களில் சேர்த்தால், அவர்களுடைய விவரத்தை கண்டுபிடிக்க கான்டெக்ஸ்ட் கார்டு உதவியாக இருக்கும்

 வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய கான்டெக்ஸ்ட் கார்டு! எதுக்கு பயன்படுகிறது தெரியுமா? ரொம்ப யூஸ்ஃபுல்!

வாட்ஸ்அப் கான்டெக்ஸ்ட் கார்டு என்றால் என்ன?: பயனர்கள் தங்களுக்குத் தெரியாத ஒருவரால் குரூப்பில் சேர்க்கப்படும் போது, கான்டெக்ஸ்ட் கார்டு பின்வரும் முக்கிய விவரங்களைக் காண்பிக்கும்.

1. யார் உங்களை குரூப்பில் சேர்த்தது
2. குரூப் உருவாக்கப்பட்ட தேதி
3. குரூப்பை உருவாக்கியவர்
4. குரூப் டிஸ்கிரிப்ஷன்

இந்த புதிய அம்சம் பயனர்கள் குரூப்பில் இருப்பதா? அல்லது வெளியேறுவதா? என்பதைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.

கான்டெக்ஸ்ட் கார்டு வசதி மட்டுமின்றி உங்களை குரூப்பில் யார் சேர்க்க வேண்டும்? என்பதை நீங்களே தீர்மானிக்கும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விளக்கமாக பார்ப்போம்.

ஸ்டெப் 1: குரூப் செட்டிங்கை மாற்றுவதற்கு வாட்ஸ் அப்பில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்லவும்.

ஸ்டெப் 2: "Account" என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் "Privacy" என்பதைக் கிளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: "Groups" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுக்கு மூன்று விருப்பங்கள் காண்பிக்கப்படும்

Everyone: Everyone என்பதைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தீர்கள் என்றால், உங்களை யார் வேண்டுமானாலும் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய வைக்கலாம்.

My Contacts: உங்கள் கான்டேக்ட்டில் உள்ள நபர்கள் மட்டுமே உங்களை வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க முடியும்.

My Contacts Except: "My Contacts Except" என்பதன் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கான்டெக்ட்கள் (தொடர்புகள்) மட்டுமே உங்களை வேறு ஒரு குரூப்புகளில் சேர்க்க முடியும்.

மேல் கண்ட மூன்று விருப்பங்களில் எதை வேண்டுமானாலும், நீங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என்னை யார் என்று தெரியாதவர்கள் குரூப்புகளில் சேர்த்து விடுகின்றனர் என்றும் புலம்பும் நபர்களுக்கு.. My Contacts மற்றும் My Contacts Except ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கான்டெக்ஸ்ட் கார்டு அம்சம் ஏற்கனவே வெளிவரத் தொடங்கிவிட்டது மற்றும் வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+