இந்திய மக்களுக்கு முழுமையாக வேக்சின் செலுத்தப்படாத நிலையிலும், புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் மக்களையும் பொருளாதாரத்தையும் அச்சுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு வேக்சின்-க்கு ஆர்டர் செய்யாத காரணத்தால் இந்தியாவின் மிகப்பெரிய வேக்சின் தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா தனது வேக்சின் உற்பத்தியை 50 சதவீதம் வரையில் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஒமிக்ரான் வைரஸ்
உலக நாடுகளில் புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ்-க்கு பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்தின் கோவிட்19 வேக்சின் குறிப்பிட்ட அளவிலான பாதுகாப்பை அளிப்பதாகவும், 3 தடுப்பூசி போடுவதன் மூலம் ஒமிக்ரான்-ஐ பரவலில் இருந்து பாதுப்பாபு பெற முடியும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா
இந்தச் சூழ்நிலையில் இந்தியாவில் 2வது வேக்சின் பெற முடியாத பலர் இருக்கும் நிலையில் மத்திய அரசு வேக்சின்-ஐ ஆர்டர் செய்யாத காரணத்தால் கோவிஷீல்டு உற்பத்தி அளவை 50 சதவீதம் வரையில் குறைக்கத் திட்டமிட்டு வருவதாகச் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
ஆதார் பூனாவல்லா
இதுமட்டும் அல்லாமல் ஆதார் பூனாவல்லா தலைமை வகிக்கும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் மத்திய அரசு வேக்சின் தேவை குறித்துக் கடிதம் அனுப்பியுள்ளது. இதேபோல் இந்தக் கடிதத்தில் பூஸ்டர் வேக்சின் தேவை குறித்தும் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கேள்வி கேட்டுள்ளது.
250 மில்லியன் கோவிஷீல்டு வேக்சின்
சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் மாதத்திற்கு 250 மில்லியன் கோவிஷீல்டு வேக்சின் டோஸ் உற்பத்தி செய்து வருகிறது, இந்தியாவில் தற்போது பெரும் பகுதி மக்களுக்கு வேக்சின் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் மத்திய அரசின் ஆர்டர்களை முழுமையாக அளிக்கப்படும் என ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு
மேலும் அவர், தற்போது புதிய ஆர்டர்கள் மத்திய அரசிடம் இருந்து இல்லாத நிலையில், வரும் மாதம் முதல் உற்பத்தி அளவை குறைந்தபட்சம் 50 சதவீதம் வரையில் குறைக்கத் திட்டமிட்டு வருகிறேன் எனச் சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
புதிய ஆர்டர்கள்
புதிய ஆர்டர்கள் இந்தியா அல்லது உலக நாடுகளில் இருந்து வந்தால் உற்பத்தியை மேம்படுத்துவோம் எனவும் ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார். மேலும் கோவிஷீல்டு வேக்சின் ஏற்றுமதி தற்போது மந்தமாக இருக்கும் நிலையில், புதிய ஆர்டர்களைப் பொருத்து உற்பத்தி அளவு முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
ஏற்றுமதி
கடந்த 8 மாதமாகச் சீரம் நிறுவனத்தால் கோவிஷீல்டு வேக்சின்-ஐ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளவில் உற்பத்தி செய்து உலக நாடுகளின் தேவையைப் பூர்த்திச் செய்துள்ளதால் எங்களுக்குச் சந்தை பங்கீடு மிகவும் குறைவாக உள்ளது எனவும் ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications