ஐடி நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை காரணமாகக் கூறி ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ச்சியாக வேலையில் இருந்து நீக்கிய வண்ணம் இருக்கின்றன. ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக நம்முடைய அன்றாட வேலைகளில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாக மாறி வருகின்றன. ஆனால் ஐடி போன்ற டெக் துறைகளில் பணி செய்யக்கூடிய ஊழியர்களுக்கு எஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய ஒரு ஆபத்தை உண்டாக்கி இருக்கிறது.
பெரும்பாலான நிறுவனங்கள் ஏஐ கொண்டு நாங்கள் வேலையை பார்த்துக் கொள்கிறோம் மனிதர்கள் நீங்கள் வேலையை விட்டு செல்லலாம் என ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கிய வண்ணம் இருக்கின்றன. எதற்கெடுத்தாலும் ஏஐ காரணமாக கூறி ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. உலகெங்கிலும் இருக்கக்கூடிய அனைத்து ஐடி மற்றும் டெக் நிறுவனங்களிலும் இதுதான் நிலைமை.

இந்நிலையில் சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் பெனியாஃப் இனி எங்களுக்கு இன்ஜினியர்கள் தேவையே இல்லை என பேசி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய அவர் 2026 ஆம் நிதி ஆண்டில் புதிதாக எந்த ஒரு பொறியாளர்களையும் எங்கள் நிறுவனத்தில் நாங்கள் வேலைக்கு எடுக்கவில்லை என கூறியிருக்கிறார். எங்களுடைய நிறுவனம் கோடிங் உள்ளிட்ட அனைத்தி வேலைகளையும் ஏஐ கொண்டே முடித்துக் கொள்கிறது என பதில் அளித்திருக்கிறார்.

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் மனிதர்களை கொண்டு வேலை செய்யும் போது எந்த மாதிரியான ஒரு அவுட்புட் கிடைத்ததோ அதே போன்றை அவுட்புட் வெறும் ஏஐ அமைப்புகள் மூலமே தற்போது பெறுகிறது என கூறும் அவர் எங்களுக்கு பொறியாளர்களே இனி தேவைப்பட மாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டில் நாங்கள் புதிதாக யாரையும் வேலைக்கு எடுப்பதில்லை இனிமேலும் எங்களுக்கு இன்ஜினியர்கள் தேவைப்படவே மாட்டார்கள் ஏனெனில் ஏஐ ஏஜெண்டுகளே போதும் என கூறி இருக்கிறார்.
முன்னதாக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாரியோவும் ஏஐ மாடல்கள் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யும் வேலையை இன்னும் திறம்பட செய்கின்றன எங்கள் நிறுவனத்தில் கூட பெரிய அளவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களுக்கு தேவை இருக்காது என தெரிவித்திருந்தார். அமெரிக்காவை சேர்ந்த சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் ஏற்கனவே கஸ்டமர் சர்வீஸ் வேலைகளில் ஏஐ-ஐ பணிக்கு அமர்த்தி மனிதர்களை பணிநீக்கம் செய்துவிட்டது.
தற்போதைக்கு சேல்ஸ் பிரிவில் மட்டும் தான் மனிதர்கள் தேவைப்படுகிறார்கள் அங்கே நாங்கள் கூடுதலாக 20 % பேரை வேலைக்கு எடுப்போம் என தெரிவித்துள்ள சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக செய்யக்கூடிய வேலைகளை ஏஐ பார்த்துக் கொள்ளும் நிறுவனத்திற்கு புதிதாக கிளைண்டுகளை கொண்டு வருவது வருமானத்தை பெருக்குவது உள்ளிட்டவற்றை மனிதர்கள் பார்த்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
சேல்ஸ்போர்ஸின் ஏஐ பிரிவான ஏஜென்ட்ஃபோர்ஸ் ஏற்கனவே 800 மில்லியன் டாலர்கள் வணிகத்தை கொண்டு வந்து விட்டதாம் அது தவிர இந்நிறுவனத்தின் ஏஐ மற்றும் டேட்டா பிரிவு 2.9 பில்லியன் டாலர் வணிகத்தை கொண்டு வந்திருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications