2025 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, மோடி 3.0 அரசின் முன்னுரிமைகள் குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் செயலாளர் துஹின் கந்தா பாண்டே சமீபத்தில் PHDCCI கூட்டத்தில் பங்கேற்ற போது முக்கிய தகவல்களைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய வருமான வரி மசோதாவில் எந்தவித புதிய வரிகளும் விதிக்கப்படாது என்று உறுதியாகத் தெரிவித்தார். இவரின் கருத்து, வரி உயர்வு தொடர்பான மக்களின் அச்சத்தைப் போக்கியுள்ளது என்றால் மிகையில்லை.

மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டில் 12 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் வாயிலாக வரி விலக்கு அளித்தாலும், புதிய வருமான வரி மசோதாவில் புதிய வரி அல்லது புதிய சுமை மக்கள் தலையில் வைக்கப்படும் என்ற அச்சமும், கேள்வியும் தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால் நிதியமைச்சகத்தின் வருவாய் செயலாளர் துஹின் கந்தா பாண்டே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரையில் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி, பட்ஜெட் "மக்கள் நலன் சார்ந்ததாகவும் வரி செலுத்துவோர் நலன் சார்ந்ததாகவும்" இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், குடிமக்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் வருவாய் செயலாளர் துஹின் கந்தா பாண்டே இக்கூட்டத்தில் பேசிய போது கூறினார்.
பொருளாதார வளர்ச்சிக்கான அரசின் திட்டத்தை பாண்டே மேலும் விளக்கினார். இந்த பட்ஜெட்டில் வேளாண்மை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs), முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் ஆகிய நான்கு முக்கிய துறைகள் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க இந்தத் துறைகளைப் புத்துயிர் பெறச் செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
2025-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் விரிவான கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், "எந்தத் துறையும் பட்ஜெட் விதிகளால் பாதிக்கப்படவில்லை" என்றும் துஹின் கந்தா பாண்டே தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளிலும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசின் நோக்கத்தை இந்த பட்ஜெட்டில் காண முடியும் எனவும் துஹின் கந்தா பாண்டே பேசினார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications