லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணமா? ரயில் பயணிகளுக்கு ஒரு குட் நியூஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் கூடுதலாக லக்கேஜ்களை எடுத்து சென்றால் அபராதம் செலுத்த வேண்டும் என ரயில்வே துறை தெரிவித்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

 

இந்த செய்தி ரயில்களில் மூட்டை முடிச்சுடன் பயணம் செய்யும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது இது குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

ரயிலில் லக்கேஜ் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியன் ரயில்வே தெளிவுபடுத்தி உள்ளதால் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA ரயில்வே ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. மத்திய அரசின் செம அறிவிப்பு..! #DA

ரயில்களில் லக்கேஜ்

ரயில்களில் லக்கேஜ்

ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எவ்வளவு எடையுள்ள லக்கேஜ்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி ஏற்கனவே இந்திய ரயில்வே துறையால் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக லக்கேஜ் கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியானதால் ரயில் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூடுதல் லக்கேஜ்

கூடுதல் லக்கேஜ்

ரயில்வே துறை ஏற்கனவே லக்கேஜ்கள் குறித்த நிலையை தெளிவுபடுத்தி இருந்தாலும் அதற்கு மேல் லக்கேஜ்களை எடுத்து செல்லும் பயணிகளை இரயில்வே நிர்வாகிகள் கண்டு கொண்டதில்லை. ஆனால் தற்போது கூடுதல் லக்கேஜ்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல் காரணமாக பலர் பார்சலில் லக்கேஜ்களை புக் செய்ய ஆரம்பித்தனர்.

லக்கேஜ் கொள்கை
 

லக்கேஜ் கொள்கை

இந்த நிலையில் தற்போது ரயில்வே லக்கேஜ் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், தற்போது இந்த கொள்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருக்கிறது என்றும் இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

டுவிட்டர்

டுவிட்டர்

இந்த தகவலை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. அதில் 'ரயில்வேயில் லக்கேஜ் கொள்கை மாற்றப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. லக்கேஜ் கொள்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஏற்கனவே லக்கேஜ் கொள்கை 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளதால் அதுவே தொடரப்படும் என்று இதன் மூலம் தெளிவு படுத்துகிறது என அறிவித்துள்ளது. இந்த தகவல் ரயில் பயணிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு லக்கேஜ்?

எவ்வளவு லக்கேஜ்?

ரயில்வே விதிகளின்படி பயணிகள் தாங்கள் பயணம் செய்யும் வகுப்புகளை பொருத்து 40 கிலோ முதல் 70 கிலோ வரை லக்கேஜ்களை ரயில் பெட்டிகளில் எடுத்துச் செல்லலாம். எந்தெந்த வகுப்புகளில் பயணம் செய்தால் எவ்வளவு லக்கேஜ்களை எடுத்து செல்லலாம் என்பதை தற்போது பார்ப்போம்.

*ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் 40 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்து செல்லலாம்.

* ஏசி வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் 50 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம்.

* முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுடன் 70 கிலோ வரை லக்கேஜ் எடுத்துச்செல்லலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No order to change Luggage Policy; Indian Railways issues clarification

No order to change Luggage Policy; Indian Railways issues clarification
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X