டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) என்பது இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகும். இது டாடா குழுமத்தின் ஒரு பகுதியாகும். இந்நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம், ஆரம்பத்தில் சில வாடிக்கையாளர்களுக்கு கணினி அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதில் இருந்து இன்று உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தில் மொத்தம் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். டிசிஎஸ் ஊழியர்களில் சுமார் 35% பேர் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், இந்நிறுவனம் சுகாதாரம், உற்பத்தி, தொலைதொடர்பு, வணிகம், கல்வி போன்ற துறைகளில் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. பல ஆண்டுகளாக நியாயமான வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பங்களிப்பு மற்றும் பொதுமக்கள் நலத்திட்டங்களில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்களான AI, Cloud, IoT, Blockchain ஆகியவற்றை விரைவாக தங்கள் சேவைகளில் இணைத்துக் கொள்கிறது.
இந்நிலையில், கடந்த சில காலமாக, உலகளாவிய பொருளாதார சவால்கள், பிரபல ஒப்பந்தங்களின் தாமதம் மற்றும் பண செலவுகளின் கட்டுப்பாடு போன்றவை டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால், இந்நிறுவனம் 2024-25ஆம் நிதியாண்டுக்கான சம்பள உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வித்துள்ளது. இது தொழில்துறையில் அரிதான முடிவாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், கடந்த ஆண்டு நியமித்த 42,000 இளநிலை பொறியியல் பட்டதாரிகளை உடனடியாக வேலைக்கு இணைத்துக் கொள்ள முடியாத சூழலில் உள்ளது. இருப்பினும், இந்நிறுவனம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான 40,000 புதிய பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இது நிறுவனத்தின் வணிக செயல்திறனைப் பொறுத்து மாற்றப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊதிய உயர்வு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைந்துள்ளது. பல ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வும் மேலும் தாமதமாகி வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தை பொறுத்தவரை அனுபவம் மற்றும் பதவியைப் பொறுத்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பெரும் வித்தியாசம் இருக்கும்.
டிசிஎஸ் ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு..?: புதிதாக சேர்ந்தவர்களுக்கு மாத சம்பளம் ரூ.28,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும். 2 முதல் 5 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.40,000 முதல் ரூ.70,000 வரையும், தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் டீம் லீட்களுக்கு ரூ.75,000 முதல் ரூ.1.25 லட்சம் வரையும், ப்ராஜெக்ட் மேலாளர்கள் மற்றும் சினியர் ரோல்களுக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரையும், Data Scientist, AI Engineer போன்ற பதவிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுவே, டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற ஊழியர்கள் அதிக சம்பளத்தை பெறுகின்றனர். அமெரிக்காவில் மாத சம்பளம் சுமார் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையும், இங்கிலாந்தில் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையும் சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர்களுக்கு சம்பளத்துடன் சேர்த்து, Performance Bonus, Provident Fund, HRA, Gratuity, மருத்துவக் காப்பீடு மற்றும் ESOP (பங்குத்தொகை திட்டம்) போன்ற பல நன்மைகளும் பெறுகிறார்கள்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!



Click it and Unblock the Notifications