சாஃப்ட்வேர் வேலை என்றாலே, பெரும்பாலான இளைஞர்களுக்கு அமெரிக்க பெருநிறுவனங்களில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கும். இந்தப் பெருநிறுவனங்களில் சில ஆண்டுகள் வேலை செய்தாலும், அந்த அனுபவம் பெரியதாக மதிக்கப்படுகிறது. ஆனால், இந்த நிறுவனங்களில் வேலை கிடைப்பது சவாலாகவும் உள்ளது. ஏராளமானவர்கள் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வேலைக்கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். அந்தவகையில், 2 ஆண்டுகளாக தேடியும் வேலைகிடைக்காத விரக்தியில், இலவசமாக வேலை செய்ய தயார் என்ற இளைஞரின் பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரான இளைஞர் ஒருவர், Reddit தளத்தில் Resume-ஐ பகிர்ந்து தனது நிலைமை குறித்து பதிவிட்டுள்ளார். ("Burn my resume but please help) எனது resume - ஐ எரித்துவிடுங்கள் ஆனால் உதவி செய்யுங்கள் என்ற தலைப்பில் பகிரப்பட்டுள்ளது. அந்த பதிவில், 2023ம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளாக தேடியும் வேலை கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். வேலை தேடும் விரக்தியில், அனுபவத்தைப் பெறுவதற்காக இலவசமாக வேலை செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

நான் தொலைதூரத்தில் இருந்து கொண்டு, இலவசமாக வேலை செய்ய தயாராக உள்ளேன் என்று எழுதினார். தனிப்பட்ட காரணங்களால் தொலைதூர வேலைக்கு முன்னுரிமை தெரிவித்தாலும், வேறிடத்திற்கு மாறுவதற்கும் தயாராக இருப்பதாகவும் கூறினார். எனது மாமாவுக்கு விபத்து ஏற்பட்டு, எட்டு விலா எலும்புகள் முறிந்துள்ளன. அதனால் நான் இங்கே இருக்க வேண்டும். ஆனால் வேறிடத்திற்கு மாறுவதற்கும் தயாராக உள்ளேன். தொலைதூர வேலை எனது முன்னுரிமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான் ஜாவா, பைதான், டெவ்ஆப்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன், மேலும் API மேம்பாடு AI மாதிரிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் அனுபவம் பெற்றுள்ளேன் என்றும் கல்லூரியில் பட்டம் பெற்றதிலிருந்து, முழுநேர வேலையைப் பெற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு வைரலானதையடுத்து, பலர் உதவி செய்ய தயாராக இருப்பதாக பதிலளித்தனர். சில பயனர்கள் அவரது CV கேட்டு, வேலை வாய்ப்புகளுடன் இணைக்க முன்வந்தனர். மற்றவர்கள் தொழில் ஆலோசனைகளை வழங்கினர்.மேலும் பலர் அவரது வேலை தேடலில் வெற்றி கிடைக்க வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த பதிவு குறிப்பாக தற்போதைய டெக் வேலை சந்தையில் புதிதாக பட்டம் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்தத் துறையில், குறிப்பாக அடிப்படை நிலை பதவிகளுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, வாடிக்கையாளர்களின் செலவினங்களில் மாற்றங்கள், மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் AIயின் வளர்ச்சி போன்றவை இந்த சவால்களுக்கு காரணமாக உள்ளன.
இதேபோல், . சமீபத்தில், பல மாதங்களாக வேலை தேடிக்கொண்டிருந்த 32 வயது பெண் ஒருவர், "குழந்தைகளின் கூச்சலிடும் சூழல்" காரணமாக, 10 நிமிடங்களுக்குள் தனது குழந்தை பராமரிப்பு வேலையை விட்டுவிட்டார். நீண்ட காலமாக வேலை தேடிய அவர், அந்த வேலை தனக்கு பொருந்தாது என உடனடியாக உணர்ந்தார். இந்தக் கதை, பொருத்தமான வேலைகளைக் கண்டுபிடிப்பதில் பலர் போராடுவதை எடுத்துக்காட்டுகிறது. சில நேரங்களில், அவர்களின் திறமைகள் அல்லது ஆர்வங்களுடன் பொருந்தாத வேலைகளை ஏற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.


Click it and Unblock the Notifications