பெட்ரோல், டீசல் 'No Stock'.. தத்தளிக்கும் இந்தோனேசியா.. என்ன நடக்குது..?!

உலகம் முழுவதும் டீசல் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவைத் தொடர்ந்து தற்போது தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நாட்டின் பாலி தீவு பகுதியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.

குறிப்பாக அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போர் துவங்கிய பின்பு வளைகுடாவில் இருந்து தென்கிழக்கு நாடுகளுக்கு வரும் சப்ளை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் இந்தோனேசியாவுக்கு இயல்பாக வரும் எரிபொருளில் சப்ளையில் சுமார் 25 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

 பெட்ரோல், டீசல் 'No Stock'.. தத்தளிக்கும் இந்தோனேசியா.. என்ன நடக்குது..?!

இதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து, இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் பங்குகளில் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து வாகனங்களில் நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. சுற்றுலாவை அதிகம் நம்பியிருக்கும் நாட்டில் இத்தகைய பாதிப்பு அந்நாட்டின் அரசைக் கடுமையாகப் பாதிக்கும்.

மேலும் இந்தோனேசியாவில் பல பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் இருப்பு இல்லை என பலகை வைக்க துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read

இதேபோன்ற நிலை தான் கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டில் உருவானது, ஆனால் பிரான்ஸ் நாட்டிற்கும் துருக்கியில் இருந்து புதிய சப்ளை ஆதாரம் கிடைத்த நிலையில் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளித்தது, ஆனால் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு புதிய சப்ளை பெறுவதில் அதிகப்படியான சிக்கல் உருவாகியுள்ளது.

தற்போது இந்தோனேசியாவில் சுமார் 11 மாகாணங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மேற்கு சுமத்ரா பகுதியில் எரிபொருள் வாங்க மக்கள் 2 - 3 மணி நேரம் வரையில் பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கின்றனர்.

Recommended For You

மேலும் பாண்டன் என்னும் பகுதியில் டீசல் வாங்குவதற்காக அப்பகுதி மக்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதோடு ஆச்சே, ரியாவ், மேற்கு கலிமந்தான், தெற்கு சுலவேசி, வடக்கு சுலவேசி மற்றும் யோக்யகர்த்தா ஆகிய பகுதிகளில் டீசல், பெட்ரலைட் (Pertalite) தீர்ந்துவிட்டதாகவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த இக்கட்டான நிலையில் இந்தோனேசியா அரசு எரிபொருள் கையிருப்பு அதிகமாக உள்ள நாடுகளிடமிருந்து நேரடியாக எரிபொருளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதேபோல் பெட்ரோல் அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் விற்பனையில் கட்டுப்பாடு விதிக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+