சுங்கச்சாவடிகள் இல்லாத பயணம்: 15 நாட்களில் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிபிஎஸ் சுங்க கட்டண வசூல்..!!

இந்தியாவின் சாலை போக்குவரத்துத் துறையில் புதிய புரட்சிகர மாற்றமாக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாடு முழுவதும் செயற்கைக்கோள்(Satellite) அடிப்படையிலான சுங்க வசூல் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது பயன்படுத்தப்படும் FASTag அமைப்பை விட மேலானதாகவும், முற்றிலும் தானியங்கி முறையில்(Automatically) இந்த புதிய முறை அமையும். இந்த திட்டம் அடுத்த 15 நாட்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இந்தியாவின் சாலைப் போக்குவரத்து வரலாற்றில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போது இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. FASTag தொழில்நுட்பம் மூலமாக வாகனங்கள் சுங்க கட்டணங்களை செலுத்தி வருகின்றன. ஆனால் பல இடங்களில் வாகனங்கள் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது நேர இழப்பு, எரிபொருள் சிதைவு, போக்குவரத்து நெரிசல், தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இவற்றைத் தவிர்க்கவே, புதிய செயற்கைக்கோள்(Satellite) அடிப்படையிலான சுங்க வசூல் முறை அறிமுகமாகிறது.

சுங்கச்சாவடிகள் இல்லாத பயணம்: 15 நாட்களில் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிபிஎஸ் சுங்க கட்டண வசூல்..!!

இந்தப் புதிய அமைப்பின் கீழ், வாகனங்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் சாதனங்கள் மூலம் வாகனங்களின் நிலை மற்றும் பயண வழிகள் கண்காணிக்கப்படும். இந்தத் தகவல்கள் ஒரு செயற்கைக்கோளுடன் இணைக்கப்பட்டு செயல்படுகின்றன. வாகனங்கள் எந்த சாலைப்பாதையை பயன்படுத்துகின்றன என்பதை செயற்கைக்கோள்கள் படம் பிடித்து கண்காணிக்கும். அந்த அடிப்படையில் சுங்க கட்டணங்கள் தானாகவே கணக்கிடப்படும்.

அந்தக் கட்டணங்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகக் கழிக்கப்படும். இதனால் வாகன ஓட்டுநர்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமின்றி தொடர்ந்த பயணத்தை மேற்கொள்ள முடியும். FASTag போன்று தடைகளோ அல்லது ஸ்கேன் செய்ய வேண்டிய கட்டாயங்களோ இல்லாமல், முழுவதும் Automatic முறையாக இந்த வசூல் நடைமுறையில் அமையும்.

இந்த முறையில் பல நன்மைகள் உள்ளன. முக்கியமாக, பயண நேரம் குறையும். வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை என்பதால் நேரம் சேமிக்கப்படுகிறது. அதே நேரத்தில், எரிபொருள் வீணாகும் நிலை தவிர்க்கப்படுகிறது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் சாதகமாக அமையும். போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த அமைப்பு சுங்கச்சாவடிகளில் வாகன வரிசைகள் உருவாவதைத் தவிர்க்கும்.

இது ஒரு முன்னோடியான தொழில்நுட்ப நடைமுறையாகும். உலக நாடுகளில் சில இடங்களில் இந்த முறை செயல்படுத்தப் பட்டுள்ளதையும் இந்தியா இப்போது அந்தத் தரத்திற்கு சென்று சேரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் சாலை பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) செயல்படுத்துகிறது. முதற்கட்டமாக சில முக்கிய நெடுஞ்சாலைகளில் இந்த முறை அறிமுகப்படுத்தப்படும். அதன் பின்னர் நாடு முழுவதும் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் விரிவாக்கம் செய்யப்படும். வாகன உரிமையாளர்கள், இந்த முறையில் பங்கேற்க, தங்களது வாகனங்களில் GPS சாதனம் இருக்க வேண்டும். மேலும், வாகனம் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் பதிவாகியிருக்க வேண்டும். பயணிகள் தங்களது செலவுகளை கண்காணிக்க, அதற்கென ஒரு Appம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம், இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதைப் பற்றி கூறுகையில், "பயணிகள் இனி சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியமில்லை. செயற்கைக்கோள்கள் மூலம் வாகனங்கள் கண்காணிக்கப்படும். அவர்கள் பயணிக்கும் தொலைவுக்கு ஏற்ப சுங்க கட்டணம் தானாகவே பிடிக்கப்படும்," என தெரிவித்தார்.

இது ஒரு பெரிய மாற்றமாகும். இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் மாநில நெடுஞ்சாலைகளிலும் இதே முறை அமலாக்கப்படும். மேலும், சுங்க வசூலில் ஏற்படும் முறைகேடுகளைத் தவிர்க்க பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படலாம். பயணிகள் எளிதாகவும், விரைவாகவும், நவீன முறையிலும் பயணிக்க முடியும். இது அரசாங்கத்திற்கு வருவாயை அதிகரிப்பதோடு, பயணிகளுக்கும் பயனளிக்கிறது. இது நமது நாட்டின் டிஜிட்டல் இந்தியா கனவுக்கான மற்றொரு அடித்தளமாகக் கருதப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+