மத்திய அரசு 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், நேரடி வருமான வரியில் நிலுவையில் உள்ள சர்ச்சைக்குரிய வரிக் கோரிக்கைகளை வாபஸ் பெறுவதாக நிதியமைச்சர் சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் 1 கோடி வரி செலுத்துவோர் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பு மூலம் யாருக்கெல்லாம் லாபம்..?

2009-10 நிதியாண்டு வரையிலான காலப்பகுதியில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரையிலும், 2010-11 முதல் 2014-15 வரையிலான நிதியாண்டு காலக்கட்டத்தில் ரூ. 10,000 வரையிலும் வருமான வரி நிலுவையில் உள்ள நேரடி வரி கோரிக்கைகளைத் அரசு திரும்பப் பெற உள்ளது.
இதன் மூலம் சுமார் ஒரு கோடி வரி செலுத்துவோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
ஆதாவது இந்தக் காலக்கட்டத்தில் வருமான வரி செலுத்தியோர் முறையாக வரி செலுத்தவும், முறைகேடாக வருமான வரி தாக்கல் செய்துள்ளவர்களிடம் சரியான வரி செலுத்த கோரிக்கையும் விடுத்து வருகிறது. இது நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் காரணத்தாலும், இதற்குத் தீர்வு காண 1 கோடி பேருக்கான வரி கோரிக்கைகளை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.
மேலும் வருமான வரி செலுத்துவோருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், 2024 இடைக்காலப் பட்ஜெட்டில் வருமான வரிப் பலகை, வருமான வரிச் சலுகை என எந்தவிதமான சலுகையும் அளிக்கவில்லை. இது பலரும் கணிக்கப்பட்டதாக இருந்தாலும், தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி வரிகள் உட்பட நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்களில் எவ்விதமான மாற்றத்தையும் நிதியமைச்சர் அறிவிக்கவில்லை. இதன் காரணமாகத் தான் நேற்றே ஸ்மார்ட்போன் உதிரிபாகங்கள் மீதான வரிக் குறைப்பு அறிவிப்பு வெளியானது.
மேலும் ஸ்டார்ட்-அப் மற்றும் சில IFSC அமைப்புகளுக்கான வரிச் சலுகைகள் மார்ச் மாதத்தில் காலாவதியாகும் நிலையில் இதை மார்ச் 2025 வரை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications