கொரோனா பெருந்தொற்று காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதனை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி வலியுறுத்தின.
அப்போது தொடங்கப்பட்ட வொர்க் ப்ரம் ஹோம் (Work from home) அதாவது வீட்டிலிருந்தே பணி புரியும் இந்த நடைமுறையானது பெரும்பாலான ஊழியர்களால் விரும்பப்படும் ஒரு நடைமுறையாக இருக்கிறது.

கொரோனா தொற்று முடிந்ததை அடுத்து இயல்புநிலை திரும்பியதால் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும் என ஐடி நிறுவனங்கள் கூறின. ஆனால் பெரும்பாலான ஊழியர்களுக்கு இதில் விருப்பமில்லை.
எனவே சில நிறுவனங்கள் ஹைபிரிட் எனப்படும் ஒரு நடைமுறையை அறிமுகம் செய்தன. அதாவது ஊழியர்கள் வாரத்தின் சில நாட்கள் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்வது. வாரத்தின் சில நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரிவது என்ற நிலை கொண்டு வரப்பட்டது.
ஆனால் பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வாரத்தின் அனைத்து வேலை நாட்களுக்குமே அலுவலகத்திற்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றன. இதனால் உலக அளவில் ஐடி ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு மோதல் போக்கு நீடித்த வண்ணமே இருக்கிறது.
இந்நிலையில் பிரபல ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் வேலை செய்ய வேண்டும் என கூறியுள்ளது. அவ்வாறு வேலை செய்யவில்லை என்றால் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது.
காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியிட்ட கடிதத்தில் வணிக தலைவர்களால் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை ஊழியர்கள் கடைப்பிடிப்பது முக்கியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் கொள்கைக்கு இணங்காதது நிறுவனக் கொள்கைகளின் கீழ் கடுமையான தவறான நடத்தை என்று கருதப்படும் இதனால் நீங்கள் பணிநீக்கம் கூட செய்யப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் காக்னிசன்ட் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவிக்குமார் இந்தியாவை சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் சராசரியாக மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது வாரத்தின் அனைத்து நாட்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இல்லையெனில் பணி நீக்கம் செய்யப்படுவார் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காக்னிசன்ட் நிறுவனம் பெரும்பாலும் இந்திய ஊழியர்களை கொண்டே இயங்கி வருகிறது. இதன் காரணமாக இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காக்னிசன்ட் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 3.47 லட்சம் பேர் பணிபுரிகின்றனர் இவர்களில் 2.54 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள்.
Story written by: Devika
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications