பேஸ்புக்-ல் இருந்து துரத்தப்பட்ட ஊழியர்.. இப்போ பிரபல டெக் மில்லியனர்..! யார் இந்த Noah Kagan..?

மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வேலையில் இருந்து நீக்கப்பட்டால் ஒருவரது வாழ்க்கை இருண்டு விடாது என்பதை 41 வயதான டெக் வல்லுனர் ஒருவர் நிரூபித்துள்ளார்.

பேஸ்புக்கில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஊழியர் அடுத்த ஓரிரு நாட்களில் ஆண்டுக்கு 3.3 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் தரும் சொந்த நிறுவனத்தை தொடங்கினார் என்றால் பலரும் நம்பமாட்டார்கள். இந்திய மதிப்பில் இது ரூ.274,39,265 ஆகும். யார் இவர்..?

பேஸ்புக்-ல் இருந்து துரத்தப்பட்ட ஊழியர்.. இப்போ பிரபல டெக் மில்லியனர்..! யார் இந்த Noah Kagan..?

Appsumo.com இன் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் நோவா ககன் தாம் நாம் பேசிக்கொண்டு இருந்த நபர். சமீபத்தில் சிஎன்பிசி தொலைக்காட்சியில் Make It's Millennial Money தொடரில் இடம்பெற்றார்.

இந்த தொடரில் உலகெங்கிலும் உள்ள மக்கள் எவ்வாறு சம்பாதிக்கிறார்கள், செலவழிக்கிறார்கள் மற்றும் சேமிக்கிறார்கள் என்பதைப் பற்றி நோவா ககன் பேசினார்.

அமெரிக்காவில் வசிக்கும் நோவா ககன், இஸ்ரேலில் இருந்து வந்து அமெரிக்காவில் குடியேறிய பெற்றோரின் மகன் ஆவார். அவரது தந்தை ஆங்கிலம் பேசத் தெரியாதவர், சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். அவரது தாயார் இரவு செவிலியராக பணிபுரிந்தார். அவரது மாற்றாந் தகப்பன் கணினி பொறியாளராக இருந்தார்.

நோவா ககன் குழந்தை பருவத்தில் காஸ்டிகோ பென்சில்களை விற்று தனது படிப்பு செலவை சமாளித்தார். அத்துடன் மேஸி, ஆபிஸ் மேக்ஸ் போன்ற ரீடெய்ல் நிறுவனங்களிலும் வேலை பார்த்து சம்பாதித்தார். பேஸ்பால் மைதானங்களில் பாப்கார்ன், மிட்டாய் விற்றவர் நோவா ககன்.

பேஸ்புக்-ல் இருந்து துரத்தப்பட்ட ஊழியர்.. இப்போ பிரபல டெக் மில்லியனர்..! யார் இந்த Noah Kagan..?

ஆனால் ககன் தான் எப்படியாவது ஒரு பணக்காரனாக ஆக வேண்டும் என்று விரும்பினார். அவருக்குத் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வமம் இருந்தது. என் கனவு மைக்ரோசாப்ட் தான், பில் கேட்ஸ் உடன் இருக்க விரும்பினேன் என இந்த நேர்காணலில் கூறினார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின், பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 2004 இல் பொருளாதாரம் மற்றும் வணிகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு, 2005 இல் 23 வயதில், அவர் பேஸ்புக்கில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் ஒரு வருடத்துக்குப் பிறகு அவர் கோச்செல்லா நிறுவனத்தின் தகவல்களை பத்திரிகைகளுக்கு கசியவிட்டதால் நீக்கப்பட்டார்.

இதனால் நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், தனது பணிநீக்கம் நியாயம் தான் என்று ஒப்புக்கொண்டார்.

பணிநீக்கம் செய்யப்பட்டதும் ஒருவகையில் நல்லது தான், ஒரு தொழிலதிபராகும் யோசனை அப்போது தான்வந்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவர் தொழில்முனைவோருக்கான பயிற்சி மாநாடுகளை நடத்தினார். தென் கொரியாவில் ஆங்கிலம் கற்பித்தார், சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆலோசனைப் பணிகளைச் செய்தார். 2008ல் முழு நேர தொழிலதிபரானார்.

Facebook, Intel மற்றும் Mint.com போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அவரது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அவர் தனது டிஸ்கவுண்ட் சாப்ட்வேர் வலைத்தளமான AppSumo வை 2010 இல் ஒரு வார இறுதியில் தொடங்கினார், அது விரைவில் வெற்றி பெற்றது.

நான் AppSumo.com இல் $12 செலவிட்டேன். அதை ரெட்டிட்டில் வைத்தவுடன் உடனடியாக மக்கள் அதை வாங்கத் தொடங்கினர் என்று ககன் கூறினார்.

கடந்த ஆண்டு அவரது நிறுவனம் சுமார் $80 மில்லியன் வருவாயைப் பதிவுசெய்தது. $7 மில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியது.
ககனின் ஆண்டு சம்பளம் சுமார் $200,000 ஆகும். ஆண்டின் இறுதியில், அனைத்து செலவினங்கள் மற்றும் நிறுவனத்தில் உள்ளவர்களுக்குத் தரவேண்டிய பணத்தை தந்த பிறகு நான் லாப பங்கை எடுத்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டு, எனது சம்பளமாக 3 மில்லியன் டாலர் லாபப் பங்கை எடுத்தேன் என்று சிஎன்பிசியில் கூறினார்.

ஆப்சுமோ வணிகத்தை நடத்துவதைத் தவிர, ககன் ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறார். ஐந்து வாடகை சொத்துக்களை நிர்வகிக்கிறார். அவர் தனது 'Million Dollar Weekend'' புத்தகத்தையும் வெளியிட்டார்.

Story written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+