2024 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் வேளையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த வருடம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 3 பேர் பங்குபோட்டுக்கொள்கிறார்கள்.
உலகளவில் நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செல்வச் செழிப்புக்கு எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து முக்கியமான ஆய்வை மேற்கொண்ட டாரன் அசெமோலு (Daron Acemoglu), சைமன் ஜான்சன் (Simon Johnson) மற்றும் ஜேம்ஸ் ஏ. ராபின்சன் (James A. Robinson) ஆகிய மூவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

இந்த ஆண்டின் பொருளாதார விஞ்ஞானங்களுக்கான நோபல் பரிசு, ஒரு நாட்டின் செழிப்புக்கு சமூக நிறுவனங்களின் முக்கியத்துவத்தை இவர்கள் விளக்கியுள்ளனர். சட்டத்தின் ஆதிக்கம் குறைந்த சமூகங்களும், மக்களைச் சுரண்டும் நிறுவனங்களும் வளர்ச்சியை உருவாக்கவோ அல்லது நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவோ இல்லை என இந்த 3 அறிஞர்களும் நிரூபணம் செய்துள்ளனர்.
ஐரோப்பியர்கள் உலகின் பெரும்பகுதியை காலனித்துவ ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த போது, அந்த சமூகங்கள் இப்பகுதியில் இருக்கும் வளத்தை அடிப்படையாக வைத்து நிறுவனங்கள் மாறின. இது சில சமயங்களில் தீவிரமானதாக இருந்தது, ஆனால் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக நிகழவில்லை.
சில இடங்களில், பூர்வகுடி மக்களை சுரண்டுவதும், காலனி ஆட்சியாளர் நலனுக்காக தாங்கள் ஆட்சி செய்யும் இடங்களில் இருந்து வளங்களை எடுத்துச் செல்வது முக்கியமாக நோக்கமாகவும் கொண்டிருந்தது. மற்ற இடங்களில், காலனித்துவ ஆட்சியாளர்கள், ஐரோப்பிய மக்களின் நீண்டகால நலனுக்காக அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை உருவாக்கினர்.
இந்த வித்தியாசத்தைக் காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடுகளின் செல்வ செழிப்பில் உள்ள வேறுபாடுகள் உணர்த்துகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடக்கும் பொருளாதார மாற்றங்கள், பாதிப்புகள், மக்கள் கிளர்ச்சி பொருளாதார தாக்கம், செலவ செழிப்பில் தாக்கம் ஆகியவற்றை விளக்கியுள்ளனர். இதற்காகவே இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
சுவீடன் தேசிய வங்கி பொருளாதார அறிவியல் பரிசு என்றும் அறியப்படும் நோபல் பொருளாதார பரிசு 1969 இல் நிறுவப்பட்டது. இது அல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படுகிறது.இது சுவீடன் ராயல் அகாடமி ஆஃப் சயின்சஸ் ஆல் வருடாந்திரம் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, பணிபுரியும் பெண்கள் ஆண்களை விட குறைவாக இருப்பதற்கும் அவர்கள் பணியாற்றும் போது குறைந்த ஊதியம் பெறுவதற்கும் காரணம் என்ன என்பதை விளக்கும் அவரது ஆராய்ச்சிக்காக ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் கிளாடியா கோல்டின் கௌரவப்படுத்தப்பட்டார். 93 பொருளாதார விருது பெற்றவர்களில் மூன்றாவது பெண் அவர்தான்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications