கடந்த சில நாட்களாக Nobel prize அறிவிப்புகள் இணையத்தையும் மக்களையும் ஆட்கொண்டு இருக்கும் நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்றவர்களின் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வருடமும் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பையும், முக்கியத்துவத்தையும் பெற்று வரும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பொருளாதார மந்தநிலைக்கு உலகம் தள்ளப்பட்டு வரும் நிலையில் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி மற்றும் நிதியியல் நெருக்கடி
ஆல்ஃபிரட் நோபல் நினைவாக அளிக்கப்படும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்த வருடம் வங்கி மற்றும் நிதியியல் நெருக்கடி குறித்து ஆய்வுக்கு வழங்கப்பட்டு உள்ளது என நோபல் பரிசு அளிக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
3 பேருக்கு
இந்த வருடம் பொருளாதார பிரிவுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. Ben S.Benanke, douglas W.Diamond, Philip H.Dybvig ஆகிய 3 பேருக்கு 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது,
யார் இவர்கள்
வங்கி மற்றும் நிதியியல் நெருக்கடி குறித்துச் செய்த ஆராய்ச்சிக்காக ப்ரூக்கிங்ஸ் அமைப்பைச் சேர்ந்த பென் எஸ்.பெனான்கே, சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டக்ளஸ் டபிள்யூ. டைமண்ட், வாஷிங்கடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிலிப் எச்.டிப்விக் ஆகிய 3 வருக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா
இதில் மூன்று பேரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இவர்களின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் நிதி நெருக்கடிகளை எவ்வாறு கையாள்கிறது என்பதை மேம்படுத்தியது என நோபல் பரிசு அளிக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
வங்கிகள்
இது மட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் வங்கிகள் எவ்வளவு முக்கியமானவை குறிப்பாக நிதியியல் நெருக்கடியில் சிக்கியுள்ள போது வங்கிகளின் முக்கியம் ஆகியவற்றையும், வங்கிகள் ஏன் திவாலாகக் கூடாது என்பதை உணர்த்துகிறது இவர்களின் ஆய்வு முடிவுகள்.
1980 முதல்
1980 களின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகியோர் இந்த ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டனர். நிதிச் சந்தைகளை ஒழுங்குபடுத்துவதிலும், நிதி நெருக்கடிகளைக் கையாள்வதிலும் அவர்களின் ஆய்வும், ஆராய்ச்சியும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நோபல் பரிசு அளிக்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.
அபிஜித் பானர்ஜி
2019 ஆம் ஆண்டில் ஒன்றாகப் பணியாற்றும் சக ஊழியரும், கணவன் மனைவியுமான எஸ்தர் டுஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றனர், இந்தப் பரிசை சக ஊழியரான மைக்கேல் க்ரீமருடன் பகிர்ந்து கொண்டனர்.
எலினோர் ஆஸ்ட்ரோம்
எலினோர் ஆஸ்ட்ரோம் பொருளாதார அறிவியலில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி ஆவார். மனித ஒத்துழைப்பு தொடர்பான பணிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
நோபல் பரிசு
1901 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், உலக அமைதி, மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் பெரும் பங்காற்றியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் இது வரையில் 12 இந்தியக் குடியுரிமை உள்ளவர்கள் அல்லது இந்தியாவில் பிறந்தவர்கள் பெற்றுள்ளார்கள் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.
இந்தியர்கள்
1902 ஆண்டு - ரொனால்டு ராஸ் - மருந்தியல் (இந்தியாவில் பிறந்தவர்)
1907 ஆண்டு - இரட்யார்ட் கிப்ளிங் - இலக்கியம் (இந்தியாவில் பிறந்தவர்)
1913 ஆண்டு - இரவீந்திரநாத் தாகூர் - இலக்கியம்
1930 ஆண்டு - ச. வெ. ராமன் - இயற்பியல்
1968 ஆண்டு - ஹர் கோவிந்த் குரானா - மருந்தியல்
1979 ஆண்டு - அன்னை தெரேசா - அமைதி
1983 ஆண்டு - சுப்பிரமணியன் சந்திரசேகர் - இயற்பியல்
1998 ஆண்டு - அமர்த்தியா சென் - பொருளியல்
2001 ஆண்டு - வி. சூ. நைப்பால் - இலக்கியம்
2009 ஆண்டு - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் - வேதியியல்
2014 ஆண்டு - கைலாஷ் சத்யார்த்தி - அமைதி
2019 ஆண்டு - அபிஜித் பானர்ஜி - பொருளாதாரம்
ரவீந்திரநாத் தாகூர்
உலகின் மிக உயர்ந்த விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை கொண்டவர் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் தான். இவருக்கு முன்பு இந்தியாவில் பிறந்த ரொனால்டு ராஸ், இரட்யார்ட் கிப்ளிங் ஆகியோர் நோபல் பரிசு பெற்று இருந்தாலும் அவர்கள் வெளிநாட்டவர்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications