உலகில் கோடிக்கணக்கில் பணம் புரளும் விளையாட்டாக கிரிக்கெட் மாறிவிட்டது, உயர்ந்துவிட்டது. ஏறத்தாழ 250 கோடி ரசிகர்கள் இந்த விளையாட்டை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து வருகின்றனர். ஆசியாவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக உள்ளது.

டி20 லேட்டஸ்ட் ரேங்கிங்கில் இந்தியா 268 பாயிண்டுகளைப் பெற்று முதல் இடத்தில் யாராலும் அசைக்க முடியாத அளவில் உள்ளது. உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் புகழ் பரவி வருகிறது, ஓலிம்பிக் போட்டிகளிலும் இதை சேரக்க உள்ளதாக பேச்சுக்கள் அடிப்படுகிறது.
கிரிக்கெட் விளையாட்டின் புகழை பார்க்கும் போது என்றைக்காவது ஒருநாள் வருமானத்திலும், ரசிகர் பட்டாளத்தில் கால்பந்துடன் கிரிக்கெட் மோதும் நாள் வராமல் போகாது என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் அதெல்லாம் ஒரு புறம் இருக்க, தனிப்பட்ட முறையில் கிரிக்கெட்டில் அதிகம் சம்பாதித்தது யார் என்ற கேள்வி எப்போதும் இருக்கும். அப்படி 2023 ஆம் ஆண்டு பட்டியலை பிஸ்னஸ் கனெக்ட் வெளியிட்டது.
உலகின் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மாஸ்டர் பிளாஸ்டர், காட் ஆப் கிரிக்கெட் என கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் தான்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமானவருமானவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாளராகக் கருதப்படுகிறார். ஒருநாள் போட்டியில் 18000 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15000 ரன்களுக்கு மேலாக குவித்த வீரர் சச்சின் டெண்டுல்கர்.
அவரது கிரிக்கெட் பயணத்தில் பெயர் புகழுக்கு இணையாக ஏகப்பட்ட சொத்துகளை சம்பாதித்துள்ளார். அவரது சொத்துகளின் நிகர மதிப்பு 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 1110 கோடி ரூபாயாகும். ஸ்பான்சர்கள் மற்றும் நிறுவனங்கள் தவிர சச்சினின் வருமானம் அவரது அதிகமான சம்பளத்தில் இருந்து கிடைத்தது.
சச்சின் டெண்டுல்கர் பயோ:
பிறந்தது- மும்பை 1973 ஏப்ரல் 24ஆம் தேதி
விருதுகள்- பாரத ரத்னா, விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் ஆப் தி இயர், இன்னும் பல
மனைவி - அஞ்சலி
உயரம் -1.65 மீட்டர்
குழந்தைகள் - அர்ஜுன் டெ ண்டுல்கர், சாரா டெண்டுல்கர்
பேட்டிங் ஸ்டைல் - ரைட் ஹேண்டடு
செஞ்சுரிகள் - 51
எம்.எஸ்.தோனி இப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு 2008 முதல் 2014 வரை கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் குறிப்பிட்ட ஓவர் போட்டிகளில் 2007 முதல் 2017 வரை கேப்டனாகவும் இருந்தவர் மகேந்திர சிங் தோனி. இப்போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
தோனியின் தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி 2011 உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராக தோனி பாராட்டப்படுகிறார். அவரது சிறப்பான விளையாட்டு உத்திகளுக்குப் பெயர் போனவர்.
ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படும் தோனி, கேப்டன் கூல் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். இவரது சொத்து மதிப்பு 125 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும், இது இந்திய மதிப்பில் 1030 கோடியாகும். கடந்த சில ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எம்.எஸ்.தோனி பயோ:
பிறந்தது- ராஞ்சி 1981 ஜூலை 7ஆம் தேதி
மனைவி- சாக்ஷி தோனி
உயரம்- 1.8 மீட்டர்
உடன்பிறந்தவர்கள் - நரேந்திர சிங் தோனி, ஜெயந்தி குப்தா
அணி- 2018இல் சென்னை சூப்பர் கிங்ஸ்
பெற்றோர்- பான் சிங் தோனி, தேவகி தேவி
முழுப்பெயர்- மகேந்திர சிங் பான்சிங் தோனி

உலகின் டாப் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் டாப் 3 இடங்களை பிடித்ததும் இந்தியர்கள் என்பதில் பெருமை மிக்க விஷயம். 3வது இடத்தில் இருப்பவர் விராட் கோலி. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வீரராகவும் விளங்கியவர் வீராட் கோலி. இந்த தலைமையில் உலகின் தலைசிறந்த வலது கை பேஸ்ட்ஸ்மேன் ஆக போற்றப்படுபவர்.
அவரது நிகர சொத்து மதிப்பு 122 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் 1010 கோடியாகும். சம்பளக் கணக்கில் பார்த்தால் அதிகம் பெறக்கூடியவர்களில் நம்பர் 1 இடத்தில் கோலி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பவுண்டேஷனாக விராட் கோலி பணியாற்றுகிறார். சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்த பெருமையை விராலி பெற்றுள்ளார்.
பிசிசிஐ, ஐபிஎல் ஒப்பந்தம் மற்றும் எண்டார்ஸ்மென்ட் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருடாந்திர வருமானம் தான் அவரது முதன்மையான வருமானம். ஐஎஸ்எல்-லில் கோவா-வைச் சேர்ந்த கால்பந்து அணியான எஃப்சி கோவாவின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.
விராட் கோலி பயோ:
பிறந்தது- புதுதில்லி, 1988 நவம்பர் 5 ஆம் தேதி
உயரம்- 1.75 மீட்டர்
மனைவி- அனுஷ்கா சர்மா
அணி- இந்திய கிரிக்கெட் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
2008இல் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் இந்திய அணியில் சேர்ந்தார், 2006இல் தில்லி கிரிக்கெட் அணியில் இருந்தார்.
பேட்டிங் ஸ்டைல்- ரைட் ஹேண்டடு
தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக்குஸ் கால்லீஸ் சிறப்பான வலது கை ஆல் ரவுண்டர். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்களை எடுத்துள்ளார். 250 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் ஜாக்குஸ் கால்லீஸின் நிகர சொத்து மதிப்பு 110 மில்லியன் டாலர்கள் ஆகும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பணக்கார வீரராகக் கருதப்படுகிறார். அவரது சொத்தின் பெரும்பான்மை பங்கு கிரிக்கெட்டில் இருந்து வந்ததாகும்.

ஜாக்குஸ் கால்லீஸ் பயோ:
பிறந்தது- பைன்லாந்து, கேப்டவுன் தென்ஆப்பிரிக்கா, 1975 அக்டோபர் 16ஆம் தேதி
மனைவி- சார்லீன் ஏஞ்சல்ஸ்
குழந்தை- ஜோஷுவா ஹென்றி கால்லீஸ்
பேட்டிங் ஸ்டைல்- ரைட் ஹேண்டடு
உயரம் - 1.8 மீட்டர்
விருதுகள்- சர் காரிபீல்டு சோபர்ஸ் விருது
இந்தியாவில் கங்குலியைத் தெரியாத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க மாட்டார்கள். இதுவரை இருந்ததிலேயே சிறப்பாகவும் அதிகாரம் படைத்தவராகவும் கேப்டன் பணியை ஆற்றியவர் சௌரவ் கங்குலி.
கங்குலியின் நிகர சொத்து மதிப்பு 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.இந்திய ரூபாயில் 634 கோடிகளாகும்.
கங்குலிக்கு மிகப் பெரிய பிராண்டு வேல்யு இருந்தது. சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கமண்டேட்டராகவும் இருந்துள்ளார். பல பிராண்டுகளுக்கு விளம்பரங்களை செய்துள்ளார்.
சௌரவ் கங்குலி பயோ:
பிறந்தது- பெஹலா, 1972 ஜூலை 8 ஆம் தேதி
மனைவி- டோனா கங்குலி
குழந்தை- சனா கங்குலி
உயரம்- 1.8 மீட்டர்
செஞ்சுரிகள்- 18
முழுப்பெயர்- சௌரவ் சந்திதாஸ் கங்குலி
பேட்டிங் ஸ்டைல்- லெப்ட் ஹேண்டடு
உலகின் முதல் 10 பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பின்வருமாறு:-
1. சச்சின் டெண்டுல்கர் - $165 மில்லியன் (1350 கோடி ரூபாய்) -
2. எம்எஸ் தோனி - $125 மில்லியன் (1030 கோடி ரூபாய்)
3. விராட் கோலி - $122 மில்லியன் (1010 கோடி ரூபாய்)
4. ஏபி டி வில்லியர்ஸ்- $25 மில்லியன்
5. ரிக்கி பாண்டிங் - $70 மில்லியன்
6. பிரையன் லாரா - $60 மில்லியன்
7. கிறிஸ் கெய்ல் - $45 மில்லியன்
8. ஜாக் கால்லீஸ் - $ 110 மில்லியன்
9. சௌரவ் கங்குலி - $80 மில்லியன்
10. ஷேன் வாட்சன் - $40 மில்லியன்
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

தோனி-க்கு நிகராக சஞ்சு சாம்சன்.. குரு சிஷ்யன் என்றால் சும்மாவா..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications