ஒரு தொழிலதிபர் எல்லோராலும் விரும்பப்படுவது, மதிக்கப்படுவது மிகவும் அரிது, ஆனால் ரத்தன் டாடா மட்டும் இதற்கு விதிவிலக்கு. ரத்தன் டாடா எப்போதும் நாட்டு மக்களின் நலன், தனது ஊழியர்களுக்கு நியாயமான பணி சூழல் உருவாக்குவதில் அதிகம் கவனம் செலுத்திய நிலையில் மக்கள் மனதில் உயர்ந்து நின்றார்.
இப்படியிருக்கையில் ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா டிரஸ்ட் தலைவர் பதவி மட்டும் அல்லாமல் டாடா குழுத்தில் உயர்மட்ட இடத்தை எட்டினார். இந்த நிலையில் நோயல் டாடா-வின் குடும்ப உறுப்பினர்கள் அடுத்தடுத்து நிர்வாக பதவிகளுக்குள் நுழைய துவங்கியிருக்கும் காரணத்தால் மூத்த அதிகாரி இதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

டாடா குழுமத்தின் முக்கிய அங்கமான சர் ரத்தன் டாடா இண்டஸ்ட்ரியல் இன்ஸ்டியூட் (SRTII) தனது நிர்வாக உறுப்பினர்களை திடீரென மாற்றியுள்ளது. நோயல் டாடாவின் மகள்களான மாயா டாடா மற்றும் லீயா டாடா ஆகியோரை புதிய டிரஸ்டியாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
SRTII நிர்வாக குழுவில் இருந்த அரனாஸ் கோட்வால் மற்றும் ஃப்ரெட்டி தலட்டி ஆகியோர் விலகியதைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால் இவ்விருவரும் தானாக வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்பது தான் தற்போது பிரச்சனை. நோயல் டாடா தனது அதிகாரத்தை பயன்படுத்தி மகள்களுக்கு நிர்வாக குழுவில் இடத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
இதுவரையில் டாடா குழுமத்தின் சாதாரண ஊழியர்களாக மட்டுமே இருந்த மாயா மற்றும் லீயா டாடா ஆகியோர் டாடா டிரஸ்ட் நிர்வாகத்திற்கு நுழைந்துள்ளனர். இவர்கள் தற்போது சர் ரத்தன் டாடா இண்டஸ்ட்ரியல் இன்ஸ்டியூட் நிர்வாக குழுவில் பணியாற்றினாலும், டாடா டிரஸ்ட்-ல் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் முக்கிய இரண்டு அறக்கட்டளைகளான சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் தோராப்ஜி டாடா டிரஸ்ட்-களின் நிர்வாக குழுவில் சேர்க்கப்படவில்லை.
சர் ரத்தன் டாடா இண்டஸ்ட்ரியல் இன்ஸ்டியூட் என்பது சர் ரத்தன் டாடா டிரஸ்ட்-ன் ஒரு பகுதியாகும். இந்த தலைமை மாற்றம் சில உள் முரண்பாடுகள் உள்ளதாக சர் ரத்தன் டாடா இண்டஸ்ட்ரியல் இன்ஸ்டியூட்-லே் இருந்து வெளியேறும் டிரஸ்டிகளில் ஒருவரான அரனாஸ் கோட்வால் கூறியுள்ளார்.
அரனாஸ் கோட்வால் பதவி விலகுவதாக அறிவித்தாலும், டாடா நிர்வாகத்திற்கு அவர் அனுப்பிய ஈமெயில் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது. அரனாஸ் கோட்வால் அனுப்பிய ஈமெயிலில் அவரை விலகச் சொன்ன முறையை விமர்சித்துள்ளார். தன்னை பதவி விலக கூறியது மட்டும் அல்லாமல் நிர்வாக நேரடியா தொடர்புகொள்ளாமல் டாடா டிரஸ்ட் நிர்வாகி Burjis Taraporewala வாயிலாக கேட்கப்பட்டது குறித்து அரனாஸ் கோட்வால் தனது சகா டிரஸ்டிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நோயல் டாடாவின் மகள்கள் SRTII நிர்வாக வாரியத்தில் சேர்க்கப்படுவது டாடா டிர்ஸ்ட் நிர்வாகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. டாடா குடும்பத்தின் அடுத்த தலைமுறை நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புகளை ஏற்கும்போது, போதுமான அனுபவம் மற்றும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு தான் இது.
சர் ரத்தன் டாடா இண்டஸ்ட்ரியல் இன்ஸ்டியூட் அமைப்பை 1928 ஆம் ஆண்டு லேடி நவஜ்பாய் டாடா மற்றும் ஸ்ட்ரி ஜர்தோஸ்ட்ரி மண்டல் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு இந்தியாவில் வறுமையில் இருக்கும் பெண்களுக்கு சமையல், தையல், எம்பிராய்டரி மற்றும் மான்டெஸ்ஸோரி ஆசிரியர் பயிற்சி போன்ற துறைகளில் பயிற்சி திட்டங்களை நடத்தி அதன் மூலம் ஏழைப் பெண்களை வேலைவாய்ப்பு உருவாக்கி தரும் பணிகளை செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications