டாடா குழுமத்தின் தலைவராக இருந்த ரத்தன் டாடா இறந்த நிலையில், நேற்று மும்பையில் ஒட்டுமொத்த இந்திய தொழிற்துறை மற்றும் அரசியல் வட்டத்தில் இருந்து முக்கிய தலைவர்களும், டாடா குழும உறுப்பினர்களும், ரத்தன் டாடா வளர்த்த நாய் உட்பட அவருக்கு அஞ்சலி செலுத்தியது.
இந்த நிலையில் அடுத்த 15 மணிநேரத்தில் இன்று காலையில் டாடா டிரஸ்ட் நிர்வாகம் கூடியது. இக்கூட்டத்தில் டாடா டிரஸ்ட் பணிகளையும், நிர்வாகத்தையும் இனி யார் நிர்வாகம் செய்யப்போகிறார் என்ற முக்கியமான கேள்விக்கு விடை தேட முற்பட்ட நிலையில், டாடா குடும்ப உறுப்பினரும், ரத்தன் டாடா உடன் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் கொண்ட அவரது சகோதரர் நோயல் டாடா டாடா டிரஸ்ட்ஸின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என இக்கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இன்று முதல் டாடா குழுமத்தில் இருக்கும் 5 டிரஸ்ட் அமைப்புகளின் தலைவராக நோயல் டாடா இருப்பார். இதில் முக்கியமாகச் சார் டோராபிஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் இரண்டின் டிரஸ்டியாக ஏற்கனவே நோயல் டாடா பணியாற்றியுள்ளார்.
இந்த இரண்டு டிரஸ்ட்கள் மட்டுமே டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்-ல் சுமார் 66% பங்கை வைத்திருக்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் ஈவுத்தொகை வெளியிடும் போது டாடா டிரஸ்ட் அமைப்பு அதில் பெரும் பங்கீட்டை பெறும்.
நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர் டோராபிஜி டாடா டிரஸ்டின் 11வது தலைவராகவும், சர் ரத்தன் டாடா டிரஸ்டின் 6வது தலைவராகவும் உயர்ந்துள்ளார். இந்த நியமனம் டாடா டிரஸ்ட்ஸுக்கு முக்கியமான காலத்தில் நிகழ்ந்துள்ளது.
ஏனெனில் அவை இந்தியாவின் மிகப்பெரிய பொது நல நிறுவனமாக உள்ளது டாடா டிரஸ்ட், இதேவேளையில் ரத்தன் டாடாவின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப உடனடியாக ஒரு புதிய தலைவரை நியமிக்க வேண்டியும் மிகவும் அவசியமாக இருந்த நிலையில் தான் அவசர அவசரமாக டாடா டிரஸ்ட்-ன் நிர்வாக கூட்டம் இன்று காலையில் கூடி நோயல் டாடா-வை நியமித்தது.
இதேபோல் ரத்தன் டாடா தனது மரணத்திற்கு பின்பு யார் தனது இடத்தில் இருக்கப்போகிறார் என்பதை பற்றி முடிவு செய்யாத காரணத்தால் டாடா டிரஸ்ட் அமைப்பின் நிர்வாகம் களத்தில் இறங்கி முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
டாடா டிரஸ்ட் என்பது டாடா குழுமத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமாக விளக்குகிறது. டாடா சன்ஸ்-ல் விமான போக்குவரத்து முதல் ஆட்டோமொபைல்கள் வரையிலான பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை உள்ளடக்கியது. இந்த மெகா போர்ட்போலியோவில் டாடா டிரஸ்ட் சுமார் 66 சதவீத பங்குகளை வைத்துள்ளது.
நோயல் டாடா தலைவராக நியமிக்கப்பட்டால், உயர்மட்ட நிர்வாகத்தில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது. காரணம் இவர் ஏற்கனவே டாடா டிரஸ்ட் நிர்வாகத்தில் இருந்தவர், அதேபோல் டாடா குடும்பத்தின் ஒரு உறுப்பினர் என்பதால் பங்குதாரர்கள் மத்தியிலும் பெரும் தடுமாற்றம் இருக்காது.
2023 நிதியாண்டில் மட்டும் டாடா டிரஸ்ட் அமைப்பு நன்கொடையாகவும், தானமாகவும், மக்கள் நல திட்டங்களுக்காகழும் சுமார் ரூ.470 கோடி (சுமார் $56 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்த பணிகள் இனி நோயல் டாடா தலைமையில் நடக்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications