ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட நோயல் டாடா, தற்போது டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளார். டாடா சன்ஸ் நிர்வாக குழுவிற்குள் நோயல் டாடா வருவது, ஏன் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இதில் முதல் காரணம் 2011க்குப் பிறகு முதல் முறையாக ஒரு டாடா குடும்ப உறுப்பினர் ஒருவர் டாடா டிரஸ்ட்ஸ் மற்றும் டாடா சன்ஸ் ஆகிய இரண்டு மாபெரும் அமைப்புகளின் இயக்குநரகளாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு முன்பு இத்தகைய பதவியில் இருந்து ரத்தன் டாடா மட்டுமே.

இரண்டாவது முக்கிய காரணம், டாடா சன்ஸ் தலைவராக வேண்டும் என்பது நோயல் டாடா-வின் நீண்ட நாள் கனவு, இப்படியிருக்கையில் 2 முறை இப்பதவிக்காக முயற்சி செய்து தோல்வியை சந்தித்தவர். முதல் முறை முயற்சி செய்த போது சைரஸ் மிஸ்திரி-க்கு கொடுக்கப்பட்டது, 2வது முறை முயற்சி செய்த போது என்.சந்திரசேகரனுக்கு வழங்கப்பட்டது.
இப்படி 2 முறை முயற்சி செய்தும் டாடா சன்ஸ்-ன் தலைவர் பதவி அவருக்கு கொடுக்கப்படாத நிலையில், ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவர் பதவி கிடைத்தாலும், டாடா சன்ஸ் தலைமை பொறுப்புகளை ஏற்ற முடியாமல் இருக்க, ரத்தன் டாடா உருவாக்கிய கண்டிஷன் தான். அந்த கண்டிஷன் என்ன தெரியுமா..? கடைசியில் உள்ளது தொடர்ந்து படியுங்கள்.
இந்த நிலையில், நோயல் டாடாவின் இந்த நிர்வாகம் தீபாவளி பண்டிகை தினத்தில் நடைபெற்ற ஆன்லைன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. டாடா சன்ஸ் இயக்குநர் அவையில், டாடா டிரஸ்ட்ஸின் தலைவரான நோயல் டாடாவை சேர்த்துக்கொள்வது மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும், டாடா குடும்பத்திற்குமான உறவை பல மடங்கு மேம்படுத்த முடியும்.
இந்த நிர்வாகத்துடன், டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் தற்போது மூன்று டாடா டிரஸ்ட்ஸ் நிர்வாக இயக்குநர்கள் உள்ளனர். இவர்களுடன் TVS தலைவர் வேனு ஸ்ரீனிவாசன் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சக அதிகாரி விஜய் சிங் ஆகியோரும் இணைந்துள்ளனர். இந்த மூவரும் நோயல் டாடா மற்றும் மெஹ்லி மிஸ்திரியுடன் இணைந்து டாடா டிரஸ்ட்ஸை நிர்வகிக்கும் செயற்குழுவை உருவாக்குகின்றனர்.
டாடா சன்ஸ் நிறுவன சட்டத்தின்படி, 66% பங்குகளை வைத்திருக்கும் பெரும்பான்மை பங்குதாரரான டாடா டிரஸ்ட்ஸுக்கு, டாடா சன்ஸ் நிர்வாகத்தில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. தற்போது டாடா சன்ஸ் நிர்வாக இயக்குநரகத்தில் இரண்டு நிர்வாக இயக்குநர்கள், மூன்று நிர்வாகம் அல்லாத இயக்குநர்கள் மற்றும் நான்கு தனிப்பட்ட இயக்குநர்கள் உள்ளனர்.
கண்டிஷன்: ரத்தன் டாடா நிர்வாக பொறுப்பில் இருக்கும் போதே, ஓரே நபர் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிர்ஸ்ட் அமைப்புகளின் தலைவராக இருக்க கூடாது என்று சிறப்பு விதிமுறையை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளார்.
இதன் மூலம் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவர் பதிவியை விட்டுக்கொடுக்கும் வரையில் டாடா சன்ஸ் அமைப்பின் தலைவராக இருக்க முடியாது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications