இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாக திகழ்கிறது. இதன் விளைவாக, பெங்களூருவின் ரியல் எஸ்டேட் மற்றும் வாடகைச் சந்தை இந்தியாவின் பிற பெருநகரங்களை விட தனித்துவமான மற்றும் வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை நாடி வரும் மக்கள், இங்குள்ள குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துகளின் தேவையைத் தொடர்ந்து உச்சத்தில் வைத்துள்ளது. குறிப்பாக, வட பெங்களூரு போன்ற பகுதிகள், விமான நிலையத்தின் அருகாமை மற்றும் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் காரணமாக முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

இந்த சூழலில் தான், இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான டாடா ஹவுசிங் (Tata Housing), பெங்களூருவில் புதிதாக அறிமுகப்படுத்திய ஒரு குடியிருப்பு திட்டத்தில் ரூ.1,000 கோடிக்கும் மேல் விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக டாடா ஹவுசிங்கின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வட பெங்களூருவில் உள்ள 135 ஏக்கர் பரப்பளவிலான 'கர்னாடிகா' என்ற ஒருங்கிணைந்த குடியிருப்பு நகரத்தின் ஒரு பகுதியான 'டாடா ஹவுசிங் வர்ணம் பேஸ் I' திட்டம், ஆகஸ்ட் 2025ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை ரூ.1,000 கோடிக்கு மேல் விற்பனை தாண்டியுள்ளது.
20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த 'வர்ணம் பேஸ் I' திட்டத்தில், மொத்தம் 582 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 48 டவுன்ஹவுஸ்கள் விற்பனைக்கு இருந்தன. இதில், அடுக்குமாடிக் குடியிருப்புகள், டவுன்ஹவுஸ்கள் மற்றும் ரோ ஹவுஸ்கள் உட்பட மொத்தம் 377 யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.
இந்த வெற்றி குறித்து டாடா ரியால்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சஞ்சய் தத் கூறுகையில், "பெங்களூருவின் பிரீமியம் வீட்டு வசதிச் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. எங்கள் உத்தி, இந்த மாற்றத்தை முன்கூட்டியே கணிப்பதுதான். வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை, நீண்ட கால மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு குடியிருப்பு நகரங்களை நாங்கள் உருவாக்குகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் SVP மற்றும் தலைமை அதிகாரி சார்த்தக் சேத் பேசுகையில், "எங்கள் அணுகுமுறை சரியான வாடிக்கையாளர்களை சென்றடைய உதவியது. கடுமையான போட்டி நிறைந்த சந்தையிலும், எங்கள் திட்டத்தின் படி இலக்குகளை அடைந்து வெற்றி பெற்றிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
டாடா ஹவுசிங் டெவலப்மெண்ட் கம்பெனி லிமிடெட் என்பது டாடா ரியால்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இந்தியா முழுவதும் மற்றும் மாலத்தீவுகளில் 0.63 மில்லியன் சதுர மீட்டருக்கும் அதிகமான வளர்ச்சித் திறனுடன் 34-க்கும் மேற்பட்ட திட்டங்களில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications