டாடா குழுமம் என்ற உடனே நம் அனைவரின் நினைவுக்கு வருபவர் ரத்தன் டாடா. ஆனால் டாடா குழுமத்தின் வெற்றிக்கு டாடா குடும்பத்தை சேர்ந்த பலர் காரணமாக இருக்கின்றனர். குறிப்பாக டாடாவின் ரீடெய்ல் சாம்ராஜ்ஜியத்துக்கு விதை போட்டு வளர்த்து காட்டியவர் நோயல் டாடா.
ரத்தன் டாடா அவர்களின் சகோதரர்தான் நோயல் டாடா. இவர் டாட்டா குழுமத்தின் கீழ் செயல்படும் டிரெண்ட்(Trent) மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார்.

அது மட்டுமின்றி டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு மேலாண் இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். நேவல் டாடாவின் முதல் மனைவியின் மகன் தான் ரத்தன் டாடா. நேவல் டாடா பின்னாளில் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் சீமோனே டாடாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண பந்தத்தில் பிறந்தவர் தான் நோயல் டாடா.
வெளிநாடுகளில் மேற்படிப்பை முடித்த நோஉஅல் டாடா 1999ஆம் ஆண்டு குடும்ப தொழிலில் களமிறங்கினார். டாடா குழுமத்தின் வெளிநாட்டு வணிகத்தை நிர்வகித்து வந்த டாடா இண்டர்நேஷ்னல் நிறுவனத்தை கவனிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டில் டாடாவின் ரீடெய்ல் வணிக நிறுவனமான ட்ரெண்டை தலைமை தாங்கும் பணி வழங்கப்பட்டது.
ட்ரெண்ட் நிறுவனத்தின் கீழ் இவர் அப்போது தொடங்கியது தான் வெஸ்ட் சைடு என்ற பிராண்ட். தற்போது இந்தியாவில் வெஸ்ட் சைடு ஃபேஷன் பிராண்டை தெரியாதவர்களே இருக்க முடியாது. நோயல் டாடா தன்னுடைய சக்சஸ் ஃபார்முலாவை கொண்டி டாடா குழுமத்தின் ரீடெய்ல் வணிகத்தை தூக்கி நிறுத்தினார். இதனை அடுத்து 2003 ஆம் ஆண்டு நோயல் டாடாவுக்கு கூடுதலாக டைட்டான் இண்டஸ்ட்ரி மற்றும் வோல்டாஸ் நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்பு வழங்கப்பட்டது .
2018 ஆம் ஆண்டு டைட்டன் நிறுவனத்தின் வைஸ் சேர்மன் ஆக பொறுப்பேற்றார். 2019 ஆம் ஆண்டு ரத்தன் டாட்டாவின் அறக்கட்டளையில் ஒரு இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தற்போது டாட்டா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் முக்கிய பொறுப்பினை வகித்து வருகிறார் . டாடாவின் ரீடைல் நிறுவனமான ட்ரெண்ட், டாடா இன்டர்நேஷனல், வோல்டாஸ், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு தலைவராகவும், டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் ஆகிய நிறுவனங்களின் துணைத் தலைவராகவும் இயங்கி வருகிறார்.
நோயல் டாட்டாவின் கீழ் ட்ரெண்ட் நிறுவனத்தில் வெஸ்ட் சைடு, ஸ்டார் பஜார், ஸாரா பல்வேறு ரீடெய்ல் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. நோயல் டாட்டாவின் தலைமையின் கீழ் ட்ரெண்ட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 1.6 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. இதன் ஆண்டு வருமானம் என்பது 8,242 கோடிகளாக உயர்ந்திருக்கிறது.
தற்போது நோயல் டாடா அவர்களின் நிகர சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 12,455 கோடி ரூபாய் ஆகும். 67 வயதாகும் நோயல் டாடா, கடந்த 2016ஆம் ஆண்டு பட்ஜெட் விலை ஆடைகளை விற்பனை செய்யும் ஸூடியோ என்ற பிராண்டை தொடங்கி வெற்றி அடைய செய்துள்ளார்.
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் ஸூடியோவின் கடைகள் செயல்பட்டு வருகின்றன. நோயல் டாடாவின் வணிக உத்திகளே ஸூடியோவின் வெற்றிக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications