சமீப காலமாக அதிகரித்த வேலை, போட்டி, கடுமையான காலக் கட்டுப்பாடுகள் காரணமாக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியிருக்கிறது. இந்நிலையில் எஸ்மேடம் என்ற ஹோம் சலூன் சர்வீஸ் நிறுவனம் அங்கு பணி புரியும் ஊழியர்களின் மன அழுத்தத்தை மதிப்பிடுவதற்காக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால் இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்த உடனே அதிர்ச்சி அளிக்கும் முடிவை வெளியிட்டது. மன அழுத்தம் அதிகம் உள்ள ஊழியர்களை கணக்கெடுப்பில் கண்டுபிடித்து அதன் பிறகு அவர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பணி நீக்கம் குறித்த அறிவிப்பை HR பணியாளர்களுக்கு அனுப்பிய ஸ்கிரீன் ஷாட் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. HR அதிகாரி ஊழியர்களுக்கு அனுப்பிய ஈ-மெயிலில் அவர்களின் மன அழுத்தத்தை மதிப்பிடுவதற்காகவே இந்த ஆய்வை நடத்தியது தெரியவந்துள்ளது. இதில் அதிக அளவிலான மன அழுத்தத்தில் இருப்பவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

வைரலான ஸ்கிரீன் ஷாட்டில், டியர் டீம், வேலையில் ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றியும், உங்களின் உணர்வுகளைப் பற்றியும் புரிந்து கொள்வதற்காகவே நாங்கள் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினோம். உங்களில் பலர் பணியில் இருக்கும் போது நீங்கள் எதிர் கொள்ளும் கவலைகள் குறித்து பகிர்ந்து கொண்டீர்கள். அதை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம்.
ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்குவதில் எங்கள் நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. நாங்கள் உங்களுடைய கருத்துக்களை கவனமாக பரிசீலித்தோம். பணியிடத்தில் யாரும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே பணி நீக்கத்தை அறிவித்து கடினமான முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வரவுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெறுவார்கள். உங்கள் பங்களிப்புக்கு நன்றி.. அன்புடன் HR அதிகாரி எஸ்மேடம் என்று எழுதப்பட்டு மெயில் அனுப்பப்பட்டிருந்தது.
ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கான எந்தவித முடிவும் எடுக்கப்படாமல் அவர்களை பணிநீக்கம் செய்தது குறித்து பலரும் தங்களுடைய கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர் இது மிகவும் வினோதமான பணிநீக்கமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்தார்.
இண்டிகோவின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் இணை இயக்குனரான ஷிடிஸ் டோக்ரா தனது கணக்கில் இந்த ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்து ஒரு நிறுவனம் மன அழுத்தத்தில் இருந்தால் பணி நீக்கம் செய்யுமா? ஏதோ ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் நடந்தது போல தெரிகிறது என்று கருத்து தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications