நோக்கியா தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் கூறுகையில் புதிய தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக அடுத்த பத்தாண்டுகளில் ஸ்மார்ட்போன் என்பதே யாரிடமும் இருக்காது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் நோக்கியா தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.
அதில், '2030ஆம் ஆண்டு இறுதிக்குள் 6ஜி தொழில்நுட்பம் வரும் என்றும் ஆனால் அது ஸ்மார்ட்போன்களுக்கு உதவாது என்றும் ஸ்மார்ட் போன்களை விட அதிக தொழில்நுட்பத்தில் வேற ஒரு கண்டுபிடிப்பு ஏற்படும் என்றும் கூறினார்.
ஸ்மார்ட்போன்
இன்னும் 10 ஆண்டுகளில் ஸ்மார்ட்போனை நாம் இழந்துவிடுவோம் என்றும், ஸ்மார்ட்போனை விட அதிக தொழில்நுட்பம் தரக்கூடிய பல விஷயங்கள் நமக்கு கட்டமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் கண்ணாடிகள்
ஸ்மார்ட் போன்களை விட ஸ்மார்ட் கண்ணாடிகள் மற்றும் முகத்தில் அணிவது போன்ற ஸ்மார்ட் சாதனங்களை மக்கள் வருங்காலத்தில் விரும்புவார்கள் என்றும் நோக்கியா தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க் கூறினார்.
6ஜி சேவை
உலகில் பல நாடுகளில் 5ஜி சேவை கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இந்தியா இப்போது தான் 5ஜி சேவையில் சோதனை செய்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் 5ஜி வருவதற்குள் உலகின் பல நாடுகளில் 6ஜி சேவை மற்றும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பமும் மாறிவிடும் போல் தெரிகிறது.
மொபைல்
2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி சேவை வந்துவிடும் என்றும் ஆனால் அதற்குள் உலகின் பெரும்பாலான நாடுகளில் தொழில்நுட்பம் மாறிவிடும் என்றும் நோக்கியோ சி.இ.ஓ கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்கள் மொபைலை கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆனது. அந்த மொபைலும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆனது.
தொழில்நுட்பம்
இந்த நிலையில் 2ஜி, 3ஜி, 4ஜி என படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் 5ஜி நெட்வொர்க்கை விரைவில் கொண்டு வர பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் 6ஜி தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட்போன் சேவை நின்று விடலாம் என்றும் அல்லது அதற்கு முன்பே முடிவுக்கு வரலாம் என்றும் நோக்கியோ சி.இ.ஓ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேட்ஜெட்
2030 க்கு பிறகு 6ஜி தொழில்நுட்பம் மூலம் முகத்தில் அணியும் கண்ணாடி மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி மற்றும் பிற கேட்ஜெட்களை தான் மக்கள் விரும்புவார்கள் என்று நோக்கியோ சி.இ.ஓ கூறியதை பல தொழில்நுட்ப வல்லுனர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மூளையில் சிப்
உடலில் அணியக்கூடிய பொருள்கள் மட்டுமின்றி மூளையின் சிப் பொருத்தும் காலமும் வந்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. மூளைக்கு அருகில் சிப் பொருத்தி அந்த சிப்பை கணினி மூலம் செயல்பட வைக்கலாம் என்றும், இந்த சிப் மூளையிலிருந்து வரும் சிக்னல்களை பதிவுசெய்து தேவையான வேலைகளை செய்து விடும் என்றும் கூறப்படுகிறது.
தொழில்நுட்ப புரட்சி
சோதனை முறையில் மூளையில் சிப் பொருத்தும் பணி இருக்கும் நிலையில் இந்த தொழில்நுட்பங்கள் வருங்காலத்தில் பெரும் தொழில்நுட்பபுரட்சியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருக்கும் நிலையில் அதற்குள் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications