நோக்கியா என்ற பெயருக்கு இன்றளவும் மக்கள் மக்தியில் ஒரு தனி மதிப்பு உள்ளது. ஒவ்வொரு முறையும் போன் ஸ்கிரீனில் இருக்கும் விரிசல்களை பார்க்கும் போது நோக்கியாவின் தரம் தான் நினைவுக்கு வரும். ஒரு காலத்தில் உலகின்
டாப் மொபைல் போன் நிறுவனமாக விளங்கியது, ஆனால் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களின் எழுச்சியால், 2010-ஆம் ஆண்டு நோக்கியா தனது ஆதிக்கத்தை இழந்து, பங்குச் சந்தையில் பின்னடைவைச் சந்தித்து மொபைல் போன் வர்த்தகத்தில் இருந்து காணாமல் போனது. இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?
புதிய தொழில்நுட்பத்திற்கு மாற முடியாமலும், மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன் தயாரிக்க முடியாமல் மாட்டிக்கொண்ட நோக்கியா 2011-இல், பத்து ஆண்டுகளில் முதல் முறையாக இழப்பைச் சந்தித்து தனது நிதியியல் வரலாற்று கருப்பு புள்ளியாக மாறியது. அதன் பின்பு சில காலத்திலேயே இந்நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டது பலருக்கும் தெரியும், இன்று நோக்கியா சாம்ராஜ்ஜியத்தின் நிலைமை என்ன..?

விட்டுக்கொடுக்காத பின்லாந்து நாட்டை சேர்ந்த நோக்கியா 2014-இல் முக்கியமான முடிவை எடுத்தது. முதல் முக்கிய மாற்றமாக நோக்கியாவின் தலைமை பொறுப்பை இந்தியரான ராஜீவ் சூரி-க்கு அளித்து. இது தான் நிறுவனத்தை முற்றிலும் மாற்றியமைத்தது, திவாலாக வேண்டிய ஒரு நிறுவனத்தை தற்போது பல பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது.
நோக்கியா தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட்-க்கு விற்பனை செய்த பின்பும் தனிப்பட்ட சில மாடல்களை இன்றும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் ஸ்மார்ட்போனில் இதன் வர்த்தகம், வருவாய் என்பது மிகவும் குறைவு, மாறாக நோக்கியா 5ஜி தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னணி வகிக்கும் 24 பில்லியன் டாலர் மதிப்பு நிறுவனமாக உருவாக்கியது.
நோக்கியாவின் மறுபிறவியின் துவக்கம் 2014, ராஜீவ் சூரியின் தலைமையில் எடுக்கப்பட்ட ஒரு தைரியமான முடிவு மொபைல் போன், ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதற்கு பதிலாக டெலிகாம் கருவிகள், நெட்வொர்கிங் கருவிகளை டார்கெட் செய்ய முடிவு செய்தார்.

ராஜீவ் சூரி சிஇஓ ஆக நியமிக்கப்பட்ட பின்பு நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார்: "ஸ்மார்ட்போன் தாண்டி நோக்கியா எதில் உலகளவில் சிறந்து விளங்க முடியும்?" இதற்கு பதிலாக, நிறுவனத்தின் பலமாக இருந்த நெட்வொர்க் உள்கட்டமைப்பை பிரிவு. இதில் கவனம் செலுத்த மொத்த நிர்வாகமும் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு காரணம் இப்பரிவிவை 2009 முதல் 2014 வரையில் ராஜீவ் சூரி தலைமையில் தான் இயங்கியது.
இந்த கூட்டத்திற்கு பிறகு நோக்கியா மொபைல் போன்களிலிருந்து விலகி, டெலிகாம் நெட்வொர்க் மற்றும் டெலிகாம் எண்டர்பிரைஸ் சேவைகள் பிரிவை நோக்கி தனது கவனத்தைத் திருப்பியது. இந்த மாற்றம், ஒரு காலத்தில் மொபைல் போன்களால் அடையாளப்படுத்தப்பட்ட நிறுவனத்திற்கு மிகவும் ஆபத்தானதாக இருந்தாலும், 5ஜி தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக சூரியின் முடிவு, நோக்கியாவின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

நோக்கியாவின் மறுபிறவியில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது, 2015-இல் ஆல்காடெல்-லூசென்ட் நிறுவனத்தை 16.6 பில்லியன் டாலருக்கு நோக்கியா வாங்கியது. இந்த நிறுவனத்தை வாங்கியது மூலம் சுமார் 29,000 காப்புரிமைகளையும், தொலைத்தொடர்பு ஆராய்ச்சியில் ஆழமான புதுமைகளையும் நோக்கியாவுக்கு கிடைத்தது.
இந்த முடிவு 5ஜி தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி உலகளாவிய முன்னணி நிறுவனமாக நோக்கியாவை நிலைநிறுத்த பெரிய அளவில் உதவியது. 2018-இல், நோக்கியா ரீஃப்ஷார்க் (ReefShark) என்ற 5ஜி சிப்-ஐ அறிமுகப்படுத்தியது, இது அந்தக் காலகட்டத்தில் மிகவும் சிறிய, வேகமான மற்றும் திறன்மிக்க சிப்பாக விளங்கியது. இந்த அறிமுகம், நோக்கியாவின் வளர்ச்சி வேகத்தை பல மடங்க உயர்த்தியது.
நோக்கியாவின் மறுபிறவி-யின் 2வது வெற்றி உலகளவில் 300-க்கும் மேற்பட்ட 5ஜி ஒப்பந்தங்களை 2024-ஆம் ஆண்டுக்குள் நோக்கியா பெற்றது, முக்கிய தொலைத்தொடர்பு வழங்குநர்களுடன் கூட்டு சேர்ந்து 5ஜி தொழில்நுட்பத்தை உலகுக்கு கொண்டு வந்தது.

இந்த ஒப்பந்தங்கள், நோக்கியாவை உலகளாவிய டெலிகாம் இணைப்பின் மையமாக மாற்றியது. 2022-ஆம் ஆண்டில், நோக்கியாவின் ஆண்டு வருவாய் 20 பில்லியன் டாலரைத் தாண்டியது, மேலும் சீனாவுக்கு வெளியே உலகளவில் சுமார் 29% 5ஜி வர்த்தகத்தை பிடித்தது. இந்த வெற்றி, நோக்கியாவின் கடந்தகால வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர உதவியது.
நோக்கியாவின் வெற்றியின் மற்றொரு முக்கிய அம்சம், அதன் மார்கெட்டிங் உத்தி. "5ஜி மூலம் சிறந்த, இணைந்த உலகத்தை உருவாக்குவோம்" என்ற செய்தியை உலகம் முழுவதிலும் பரப்பினர். நோக்கியா தன்னை தொழில்நுட்ப விற்பனையாளராக மட்டுமல்ல, எதிர்காலத்தை வடிவமைப்பவராகவும் நிலைநிறுத்தியது.
இந்த விளம்பரம், முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே நோக்கியாவின் புதிய பிம்பத்தை வலுப்படுத்தியது. ராஜீவ் சூரியின் தலைமையில், நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தி, தொழில்நுட்ப புதுமைகளுக்கு அதிக முதலீடு செய்யதது.

ஆனால் நோக்கியாவின் தலையெழுத்தை மாற்றிய ராஜீவ் சூரி 2021ல் நோக்கியாவை விட்டு வெளியேறினார். 1995 முதல் 2021 வரையில் நோக்கியாவில் பல பதவிகளில் பணியாற்றிய ராஜீவ் சூரி தற்போது பிரிட்டன் செயற்கைகோள் டெலிகாம் சேவை நிறுவனமான Inmarsat-ன் சிஇஓ-வாக உள்ளார்.
1967 அக்டோபர் மாதம் டெல்லியில் பிறந்த ராஜீவ் சூரி, குவைத் நாட்டில் வளர்ந்தார். தற்போது சிங்கப்பூர் நாட்டின் குடிமகனாக இருக்கும் இவர் லண்டனில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் மணிப்பால் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ECE பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பின்னர் வெளிநாட்டில் தனது கல்வியை தொடர்ந்தார்.
நோக்கியாவின் இந்த மறுபிறவி-க்கு இந்தியராக ராஜீவ் சூரி முக்கிய காரணம், இவர்மட்டும் இல்லையெனில் நோக்கியா காற்றில் மறைந்து போயிருக்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications