கொரோனா பாதிப்பின் மூலம் முடங்கிய இந்திய வர்த்தகச் சந்தையை மீட்டுக் கொண்டு வரும் நோக்கில் பல்வேறு தளர்வுகள் உடந் லாக்டவுன் 4.0 துவங்கப்பட்டது. தொழிற்துறை மற்றும் நிறுவனங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வர்த்தகத்தைத் துவங்கிய நிலையில் சில நாட்களிலேயே ஊழியர்களுக்குக் கொரோன தொற்று ஏற்படவே உடனடியாகத் தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மாருதி சுசூகி, ஹூண்டாய் நிறுவனங்கள் உற்பத்தியைத் துவங்கிய நிலையில், கொரோனா தொற்று பரவியது. இதனால் உற்பத்தி பணிகள் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சென்னையில் இயங்கும் நோக்கியா தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவிய நிலையில் கடந்த வாரம் தனது மொத்த உற்பத்தியையும் நிறுத்திவிட்டது.
நோக்கியா
நோக்கியா நிறுவனத்திற்குச் சென்னையில் மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. லாக்டவுன் 4.0-வில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் பல்வேறு முன்னெச்சரிக்கையுடன் உற்பத்தி பணிகளைத் துவங்கிய நோக்கியா நிறுவனத்திற்கு, ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்று பரவியது. இதனால் நோக்கியா தொழிற்சாலையில் பணிகள் அனைத்தும் முடங்கியது.
42 ஊழியர்கள்
நோக்கியா-வின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணிகள் அனைத்தும் கடந்த வாரமே முடங்கிய நிலையில், எத்தனை பேருக்குக் கொரோனா பரவியது என்று இந்நிறுவனம் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்தத் தொழிற்சாலையின் பணியாற்றிய குறைந்தது 42 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது.
ஓப்போ
நோக்கியா நிறுவனத்தைப் போலவே சீனா மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஓப்போ சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பு பணிகளைத் துவங்கிய நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக டெல்லியில் இருக்கும் தொழிற்சாலையைக் கடந்த வாரம் மூடியது.
இத்தொழிற்சாலையில் சுமார் 9 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
2 மாதம் லாக்டவுன்
லாக்டவுன் மூலம் 2 மாதம் நாடு முழுவதும் முடங்கிய நிலையில் தளர்வுகள் மூலம் நாட்டின் வர்த்தகம் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போது மீண்டும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இதனால் மீண்டும் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்ற அச்சமும் நிலவுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் லாக்டவுன் மீண்டும் நீட்டிக்கப்படுமா..? உங்க பதிலை கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications