இரண்டு பேருமே இறங்கி வர்ற மாதிரி தெரியலை.. கடைசில இந்தியாவுக்குதான் லாபம்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் விடுதலை தினமான ஏப்ரல் 2ம் தேதியன்று, இந்தியா மற்றும் சீனா உள்பட சுமார் 150 நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். குறிப்பாக சீனா பொருட்களுக்கு 54 சதவீதம் வரி விதித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதித்தது. சீனாவின் வரி விதிப்பு டிரம்பின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

டிரம்ப் நிர்வாகம், சீன பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் வரி விதித்து தற்போது மொத்தம் 104 சதவீதம் வரி விதித்தது. மேலும் இந்த வரி நள்ளிரவுக்கு பிறகு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது. இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சீனாவும், அமெரிக்காவும் விலையுயர்ந்த கோழி சண்டையில் (யார் முதலில் பின்வாங்கிறார்கள் என்று பார்ப்பது) ஈடுபடுவதாக முதலீட்டு வங்கியும், தரகு நிறுவனமான நொமுரா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும் சீனாவும் பின்வாங்க விரும்பவில்லை.. நொமுரா தகவல்

இது தொடர்பாக நொமுரா கூறுகையில், அமெரிக்காவும் சீனாவும் முன்னெப்போதும் இல்லாத வகையில், யார் முதலில் பின்வாங்கிறார்கள் என்று பார்ப்போம் என ஆபத்தான செயலில் ஈடுபடுகின்றனர். அதேசமயம் இரு தரப்பினரும் பின்வாங்க விரும்பவில்லை என்றே தெரிகிறது. வரி போரின் முதல் உண்மையான போர்க்களம் நிதிச் சந்தைகள்தான், குறிப்பாக பங்குச் சந்தைகள். இரு நாடுகளின் பங்குச் சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான நிலை இன்னும் வரும்.

அதேசமயம் சீனா தனது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், தேவையை அதிகரிக்க குறிப்பாக நுகர்வு தேவையை அதிகரிக்க நிதி செலவினங்களை விரைவுப்படுத்தவும், அதிகரிக்கவும் உறுதி எடுக்கும். சீனாவின் மைய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா, சீனாவின் நிலைப்படுத்துதல் நிதிகளுக்கு (நேஷனல் டீம்ஸ்) நிதியளிப்பதோடு, திட்டமிட்டதை விட விரைவில் உயர் மட்ட கையிருப்பு தேவை விகிதம் (ஆர்ஆர்ஆர்) மற்றும் வட்டி விகித குறைப்புகளையும் செயல்படுத்த முடியும்.

தற்போதைய சொத்து சந்தை நெருக்கடியை கருத்தில் கொண்டு, 2018-19ம் ஆண்டை போலல்லாமல், உள்நாட்டு நிதி மற்றும் சொத்து சந்தை ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக, சீனாவின் நாணய அமைப்பான ரென்மின்பியின் (ஆர்எம்பி) மதிப்பை குறைக்கவோ அல்லது எந்தவொரு கணிசமான நாணய தேய்மானத்திலும் ஈடுபடவோ அல்லது அனுமதிக்கும் செயலை பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா செய்யாது என்று நாங்கள் நம்புகிறோம்

நொமுரா மற்றொரு அறிக்கையில், அமெரிக்காவில் பணவீக்க அதிர்ச்சி மற்றும் வளர்ச்சி மந்தநிலை இருப்பதால் டிசம்பர் வரை பெடரல் வங்கி விகித குறைப்பை நிறுத்தி வைக்கும் இதனால் அந்நாட்டில் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்தியா மிகக் குறைவாகவே பாதிக்கப்படும். தற்போதைய உலகளாவிய விநியோகச் சங்கிலி மாற்றங்களால் இந்தியா பயனடையக் கூடும் என்று நம்புகிறோம்.

கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது ஒரு நேர்மறையான வர்த்தக அதிர்ச்சியாகும். ஏனெனில் பெரும்பாலான ஆசிய நாடுகள் நிகர கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்களாகவே உள்ளன என்று தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+