நியூயார்க்: அமெரிக்காவில் நிறுவன கொள்கைகளை மீறி தலைமை செயல் அதிகாரியுடன் ரகசிய உறவு முறையில் இருந்த இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெண் வழக்கறிஞர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் (Norfolk Southern Corporation) என்ற நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆலன் சா என்பவர் பணியாற்றி வந்தார் .
அதேவேளையில் இந்த நிறுவனத்தின் தலைமை சட்ட அலுவலராக நபானிதா நாக் என்பவர் வேலை செய்து வந்தார். இவர் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு மூத்த வழக்கறிஞர் ஆவார். இதனிடையே ஆலன் சா மற்றும் நபானிதா நாக் (Nabanitha nag) ஆகிய இருவரையும் நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

நிறுவன விதிமுறைகளுக்கு முறண்பாடாக இருவரும் ரகசிய உறவு முறையில் இருந்ததால் நிறுவனம் இவர்கள் இருவரையும் பணியில் இருந்து நீக்கம் செய்துள்ளது. பணியிடத்தில் விதிகளை மீறி தொடர்பில் இருந்ததற்காக இவர்கள் இருவருமே பணி நீக்கம் செய்யப்படுகின்றனர் என நார்ஃபோக் சதர்ன் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தில் பணியாற்ற கூடியவர்கள் அலுவலகத்தைத் தாண்டி தனிப்பட்ட ரீதியான உறவு முறைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது என விதிமுறை உள்ளது. இதனை மீறுபவர்கள் நிறுவன கொள்கைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
இந்த கொள்கையை பின்பற்றி தான் இருவரையும் வேலையிலிருந்து நீக்கி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்களுடைய முதன்மை விசாரணையில் கண்டறியப்பட்டு இருவரும் அதனை ஒப்புக் கொண்டதை அடுத்து ஒருமனதாக நிறுவன உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து எடுத்த முடிவு இது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நபானிதா நாக்கை பொறுத்தவரை ஃபார்ச்சூன் 300 நிறுவனங்களில் பணிபுரிந்த சிறப்பு வழக்கறிஞராக இருக்கிறார். இவர் இதற்கு முன்பு கோல்ட்மென் சச்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தவர். இவர் 2022 ஆம் ஆண்டுதான் நார்ஃபோக் நிறுவனத்தில் தலைமை சட்ட அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2023 ஆம் ஆண்டில் அவருக்கு நிறுவனத்தின் துணை தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தவர்.
நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலன் சா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் மார்க் ஜார்ஜ் இந்த பொறுப்பையும் சேர்த்து கவனித்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications