இந்தியாவின் டெக் நகரமாக கருதப்படும் பெங்களூர் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வருகிறது. ஒருபக்கம் பெங்களூர் தெற்கு பகுதியை மெட்ரோ மூலம் ஒசூர்-ஐ இணைக்கும் பணியில் குறியாய் இருக்கும் வேளையில், பெங்களூர் மையப்பகுதியை புறநகர் பகுதிகளை மெட்ரோ மூலம் இணைத்து போக்குவரத்து பிரச்சனையை சரி செய்யும் பணிகளை வேக வேகமாக செய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக பெங்களூர் டார்கெட் செய்திருப்பது வடக்கு பெங்களூர் பகுதி அதாவது அந்திர மாநிலத்தின் எல்லை, சர்வதேச விமான நிலையம் இருக்கும் பகுதி. இதை உணர்ந்த அனைத்து முன்னணி ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களும், கட்டுமான நிறுவனங்களும் பெங்களூர் பக்கம் திரும்பியுள்ளது.

இதனால் பெங்களூரே தற்போது வடக்கு பக்கமாக செல்கிறது. பெங்களூரில் இதுவரையில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்று வடக்கு பெங்களூரு. இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. இதனால் பெங்களூர் மக்களின் பார்வை தற்போது வடக்கு பெங்களூர் பக்கம் திரும்பியுள்ளது.
பெங்களூரில் அதிகரித்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக ஜிசிசி வருகையின் மூலம் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இப்போது பெங்களூரின் வடக்கு பகுதிகளாக யெலஹங்கா, ஜக்கூர், ஹெப்பல், தனிசந்திரா மற்றும் பாகலூர் போன்ற பகுதிகளில் டெக் பார்க்குகளை அமைக்கும் பணிகளை தீவிரமாக்கியுள்ளது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது வடக்கு பெங்களூர் பகுதியில் அலுவலகங்களை மாற்றுகின்றன அல்லது புதிய அலுவலகங்களை திறக்கின்றன. வடக்கு பெங்களூர் Manyata Business Park தான் ஒரு காலத்தில் சிறந்த மற்றும் அடையாளமாக இருந்தது, ஆனால் இப்போது கதையே வேறு.
வடக்கு பெங்களூரில் திரும்பும் பக்கமெல்லாம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது, இப்பகுதியில் கட்டப்படும் பெரும்பாலான டெக் பார்க்குகள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரின் அடுத்தக்கட்ட வளர்ச்சி என்றால் அது வடக்கு பெங்களூரில் இருந்து தான் வரும். இதற்கு ஏதுவாக சர்வதேச விமான நிலையம் இப்பகுதியில் அமைந்துள்ளது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், நகரத்திற்குள்ளேயே மிகப்பெரிய அலுவலகங்களை வைத்திருந்தாலும் நார்த்கேட் டெக் பார்க்கில் ஐந்து லட்சம் சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.
இதேபோல் சர்வதேச நிறுவனமான SAP லேப்ஸ் இந்தியா தேவனஹள்ளியில் அதன் இரண்டாவது அலுவலகத்தை கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. மேலும் போயிங் தனது இரண்டாவது பெரிய வளாகத்தை தேவனஹள்ளியில் திறக்க உள்ளது, இதோடு பிலிப்ஸ் இன்னோவேஷன் கேம்பஸ் இந்த ஆண்டு தனது முக்கியமான கேம்பஸ்-ஐ யெலஹங்காவிற்கு மாற்றுகிறது.
வடக்கு பெங்களூர் பகுதியில் நாகவார, ஹெப்பல், பயதராயனபுர, யெலஹங்கா, ஹென்னூர் சாலை, தனிசந்திரா சாலை, விமான நிலைய சுங்கச்சாவடிக்கு அருகில், சிக்கஜாலா, தேவனஹள்ளி ஆகிய பகுதிகளில் எம்பசி மான்யதா எக்ஸ்டென்ஷன், Ebisu டெக் பார்க்., ஹைன்ஸ் அப்டவுன், ஸ்ரீ ராம் ஹெப்பல் 1, பிரெஸ்டீஜ் வாட்டர்ஃபிரண்ட், பிரெஸ்டீஜ் செஞ்சுரி லாண்ட்மார்க், செஞ்சுரி டவுன்டவுன், L&T பீனிக்ஸ் டெக் பார்க், சத்வ ஹாரிசான், Bagmane சியரா வணிக டிஸ்ட்ரிக்ட், கேபிட்டலேண்ட் ஐடி பார்க் என 20க்கும் அதிகமாக டெக் பார்க்குகள் 2026 ஆம் ஆண்டுக்குள் வர உள்ளது.
இந்த டெக் பார்க்குகளில் குறைந்தது 2 லட்சம் பேர் அமரும் அளவுக்கு கட்டமைப்புகள் இருக்கும் என்பதால் அடுத்த 5 வருடத்தில் வடக்கு பெங்களூரில் மட்டுமே சுமார் 6 முதல் 8 லட்சம் பேர் குடியேர வாய்ப்புகள் உள்ளது. வடக்கு பெங்களூர் பெரும் நம்பிக்கையை பெற முக்கியமான காரணம் 2008ல் துவங்கப்பட்ட சர்வதேச விமான நிலையம், 2021ல் ஒப்புதல் பெற்ற KR Pura - Yelahanka - KIA வரையில் செல்லும் ப்ளூ மெட்ரோ லைன்.
அனைத்தையும் விட முக்கியமாக பெங்களூரில் இப்போது சீப்பான விலையில் நிலம் வாங்க வேண்மெனில் வடக்கு பெங்களூர்-ஐ விட்டால் வேறு இடம் இல்லை, இதனால் பெரும் வர்த்தக கட்டமைப்புகள் அனைத்தும் வடக்கு பெங்களூர்-ஐ நோக்கி செல்கிறது. இதனால் பெங்களூர் ரியல் எஸ்டேட் துறைக்கு கிழக்கு பெங்களூர்-ஐ தாண்டி அடுத்த டக்கரான இடமாக தெரிவது வடக்கு பெங்களூர் தான்.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications