வட இந்தியாவில் சுமார் 12 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டு உள்ள வேலைவாய்ப்பின்மை நாட்டின் மொத்த வேலைவாய்ப்பின்மை அளவீட்டைக் குறைத்துள்ளது.
இது கொரோனா தொற்றில் இருந்து வேகமாக மீண்டு வரும் இந்திய பொருளாதாரத்திற்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.
வட இந்தியா
செப்டம்பர் மாத தரவுகள் அடிப்படையில் வட இந்தியாவில் சுமார் 12 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வேலைவாய்ப்பின்மை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதில் 8 மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கில் உள்ளது.
CMIE அமைப்பு
அதில் மிக முக்கியமாக இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 4 மாத உயர்வைத் தொட்டு சுமார் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என CMIE அமைப்பு கணக்கிட்டு உள்ளது. குறிப்பாகக் கடந்த 3 மாதங்களாக வேலைவாய்ப்பின்மை அளவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லியில் மோசம்
டெல்லியில் வேலைவாய்ப்பின்மை அளவு ஜூன் மாதத்தில் 8.8 சதவீதம், ஜூலை மாதத்தில் 10.7 சதவீதம், ஆகஸ்ட் மாதத்தில் 11.6 சதவீதம் தற்போது 16.8 சதவீதம் என ஒரே மாதத்தில் 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுவாக டெல்லியில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கும் வேளையில் இந்த 4 மாத சரிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பின்மை அளவீடு
இதேபோல் வேலைவாய்ப்பின்மை அளவீடு ராஜஸ்தானில் 17.9 சதவீதம், ஹரியாவில் 20.3 சதவீதம், ஜம்மு அண்ட் காஷ்மீரில் 21.6 சதவீதம், பீஹார் 10 சதவீதம், புதுச்சேரி 11.2 சதவீதம், ஜார்கண்ட் 13.5 சதவீதம், திரிபுராவில் 15.3 சதவீதம் என 8 மாநிலத்தில் இரட்டை இலக்கு அளவீட்டில் உள்ளது வேலைவாய்ப்பின்மை.
2ஆம் கொரோனா அலை
2ஆம் கொரோனா அலைக்குப் பின்பு இந்தியாவில் பெரும்பாலான இடத்தில் உற்பத்தி மற்றும் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 4 மாதங்களாக வட இந்திய பகுதிகளில் வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.
2020 லாக்டவுன்
2020ல் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட போது வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை அளவீடு 20 சதவீதத்தைத் தாண்டிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. இதேவேளையில் தென் இந்தியாவில் என்ன நிலவரம் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
தென் இந்தியா
செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை அளவு 7.0 சதவீதம், ஆந்திராவில் 6.3 சதவீதம், தெலுங்கானாவில் 3.7 சதவீதம், கர்நாடகாவில் 3.1 சதவீதம், கேரளாவில் 8.9 சதவீதம். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா பகுதியில் 4.5 சதவீதம், குஜராத்தில் 1.3 சதவீதமாக உள்ளது.
அக்டோபர் மாதம்
மேலும் அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த வேலைவாய்ப்பின்மை அளவீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து வருவது உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications