மும்பை: உலகின் மிகப்பெரிய சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்களில் ஒன்றான நார்வே சவ்ரின் வெல்த் பண்ட், அதானி போர்ட்ஸ் & SEZ லிமிடெட் நிறுவனத்தை தனது முதலீட்டு பட்டியலில் இருந்து விலக்கியுள்ளது.
நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் பல நாட்டின் சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனங்கள் பெரும் தொகையை முதலீடு செய்து அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் நார்வே சவ்ரின் வெல்த் பண்ட் எடுத்துள்ள இந்த முடிவு அதானி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிப்பது மட்டும் அல்லாமல் பிற சவ்ரின் வெல்த் பண்ட்களும் தனது நிலைப்பாட்டை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நார்வே சவ்ரின் வெல்த் பண்ட் தனது முதலீட்டு பட்டியலிலிருந்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தை விலக்க என்ன காரணம்..? நார்வே பண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி போர் மற்றும் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விஷயங்களில் அதானி போர்ட்ஸ்-க்கு லிங்க் இருப்பதாகக் குற்றம்சாட்டி, இதை "ஏற்றுக்கொள்ள முடியாத" அபாயம் என கூறி இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நார்வே சவ்ரின் வெல்த் பண்ட் சுமார் 1.7 டிரில்லியன் டாலர் முதலீட்டை நிர்வாகம் செய்து வருகிறது. இந்த பண்டை நார்ஜெஸ் பேங்க் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (NBIM) என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
நேற்று (மே 15) ஆம் தேதி இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில், நார்ஜெஸ் பேங்க் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (NBIM) இந்த முடிவை அறிவித்துள்ளது. அதானி போர்ட்ஸ் உடன், அணு ஆயுதங்களுக்கான உதிரிபாகங்களை உருவாக்கும் அமெரிக்க நிறுவனமான எல்3 ஹாரிஸ் டெக்னாலஜிஸ் இன்க் (L3Harris Technologies Inc.) மற்றும் போர் உபகரணங்களை ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு விற்பனை செய்வதில் பங்கு வகிக்கிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சீனாவின் வீச்சாய் பவர் கம்பெனி (Weichai Power Co.) ஆகியவற்றையும் தனது முதலீட்டு பட்டியலில் இருந்து விலக்கியுள்ளது.
இந்த முடிவு, கடந்த ஆண்டு இறுதியில் ஓஸ்லோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நார்வே சவ்ரின் வெல்த் பண்ட்-க்கு ஆலோசனை வழங்கும் நார்வேயின் நெறிமுறை கவுன்சில் (Council on Ethics) அமைப்பின் பரிந்துரைகளைத் தொடர்ந்து எடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானியின் இந்த அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவனத்தை NBIM 2022 ஆம் ஆண்டு முதல் "கண்காணிப்பில்" வைத்திருந்தது. முதன்முதலில், மியான்மாரில் உள்ள துறைமுக முனையத்தில் அதன் ஈடுபாடு காரணமாகக் கண்காணிப்புக்குள் கொண்டு வந்தது.
இந்த துறைமுக திட்டத்தைக் கடந்த ஆண்டு அதானி போர்ட்ஸ் விற்றுவிட்டது. ஆனால் இந்த துறைமுகத்தை வாங்கியவர் பற்றிய தகவல்கள் கிடைக்காத காரணத்தால் நார்வேயின் நெறிமுறை கவுன்சில் அதானி போர்ட்ஸ்-க்கு இன்னும் இத்திட்டத்தில் தொடர்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தனியொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இறுதியில், NBIM நிறுவனம் எல்3 ஹாரிஸ் நிறுவனத்தில் 0.79% பங்குகளையும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் 0.24% பங்குகளையும், வீச்சாய் பவர் நிறுவனத்தில் 0.13% பங்குகளையும் வைத்திருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications