அதானி குழும பங்குகள் சில தினங்களாகத் தான் மீண்டும் சற்று ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. ஆனால் இந்த ஏற்றத்தினை மீண்டும் சீர்குலைக்கும் விதமாக, நார்வே நிறுவனம் ஒன்று அறிவிப்பு ஒன்றினை கொடுத்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது.
நார்வே மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 200 மில்லியன் டாலருக்கும் மேலாக அதானி குழுமத்தின், மூன்று நிறுவனங்களின் பங்கினை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விற்பனை செய்துள்ளது.
இந்த நார்வே நிறுவனம் உலகின் மிகப்பெரிய பங்கு முதலீட்டாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து முதலீடு குறைப்பு
கடந்த 2022ம் ஆண்டின் இறுதியில் 1.35 டிரில்லியன் டாலர் நிதியினை அதானியின் டோட்டல் கேஸ், அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி கிரீன் எனர்ஜி ஆகியவற்றில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே அதானி குழுமத்தில் இருந்து பங்குகளை குறைக்க ஆரம்பித்துள்ளதாகவும், தற்போது வரையில் அதானி குழுமத்தில் உள்ள பங்குகளை குறைக்க திட்டமிட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பல சவால்கள்
தொடர்ந்து நாங்கள் பல வருடங்களாக அதானி குழும பங்குகளை கவனித்து வருகிறோம். தற்போது அவர்கள் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதானி குழுமத்தினை சேர்ந்த முன்னணி 7 நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், 110 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பினை இழந்தது.
இன்று மீண்டும் சரிவு
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் சர்ச்சையின் மத்தியில், அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. எனினும் கடந்த சில தினங்களாவே மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
எனினும் நார்வே மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் அறிவிப்பால் இன்று மீண்டும் இப்பங்குகள் சரிவினை கண்டுள்ளன.
MSCI முடிவு
நார்வே மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் முடிவு மட்டும் அல்ல, அதானி குழும நிறுவனங்களின் MSCI அமைப்பின் சில குறியீடுகளில் இடம் பெறுவதற்கான தகுதிகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆக இதுவும் அதானி குழும பங்குகள் விலை சரிய காரணமாக அமைந்துள்ளது.
இதுவும் பிரச்சனை
MSCI குறியீட்டைப் பின்பற்றி சர்வதேச முதலீட்டாளர்கள் அல்லது முதலீட்டு நிறுவனங்கள் அதன் குறியீட்டில் உள்ள பங்குகளின் எடைக்கு ஏற்ப முதலீடு செய்கின்றன. இந்தக் குறியீட்டில் ஒரு பங்கின் வெயிட்டேஜ் அதிகரித்தால், அந்தப் பங்கின் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். ஆக இதிலும் அதானி குழுமம் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications