இன்றைய உலகம் டேட்டா தரவுகளால் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிக தரவு மற்றும் அதிக நேர சேமிப்பு இன்று முக்கியமானது. தற்போது இந்தியாவில் 5G தொழில்நுட்பம் கிடைக்கிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விரைவில் 6ஜி சேவையை வழங்கவும் தயாராகி வருகின்றன. அதிவேக இணையம் மூலம், திரைப்படங்கள் உள்ளிட்ட பெரிய கோப்புகளை நிமிடங்களில் பதிவிறக்கம் செய்யலாம். தொழில்துறை மற்றும் வணிகத் துறைகளிலும் இணைய வேகம் முக்கியமானது. தற்போதைய 5G தொழில்நுட்பம் 1 Gbps வரை வேகத்தை வழங்குகிறது. விரைவில் 6G தொழில்நுட்பம் 10 Gbps வரை வேகத்தை வழங்கும். ஆனால் இவைகளுக்கெல்லாம் டஃப் கொடுக்க வருகிறது நோக்கியா நிறுவனம்.
அதிவேக இணையத்தை வழங்கும் திட்டத்தில் நோக்கியா செயல்பட்டு வருகிறது. இது ஓபன் ஃபைபர் என்ற இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து செயல்படவுள்ளது அதன்படி, 100 ஜிபிபிஎஸ் வரை இணைய வேகத்தை வழங்க உள்ளது.

100ஜிபிபிஎஸ் வேகத்தைப் பெறுவதற்கான தொழில்நுட்பத்தை நிறுவனம் சோதனை செய்துள்ளது. இவ்வளவு வேகத்தைப் பெறுவது இணையத்தின் ஒட்டுமொத்த சமன்பாட்டையே மாற்றிவிடும். அந்த வகையில், 1ஜிபி அளவுள்ள 100 கோப்புகளை நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம். நோக்கியாவின் இந்த தொழில்நுட்பத்தை இத்தாலிய நிறுவனமான OpenFiber உடன் இணைந்து சோதனை செய்துள்ளது. Passive Optical Fiber Network (PON) OpenFiber இன் தலைமையகத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. தற்போது ஆப்டிகல் ஃபைபர் மூலம் 10ஜிபிபிஎஸ் இணைய வேகம் கிடைக்கிறது.
100 ஜிபிபிஎஸ் வேகத்தை அடைய எந்த உள்கட்டமைப்பு மாற்றங்களும் தேவையில்லை என்பது PON தனித்துவமானது. நோக்கியாவுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பயனர்கள் 100 ஜிபிபிஎஸ் வேகத்தைப் பெற முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. OpenFiber ஐரோப்பாவின் முதல் தொலைத்தொடர்பு நிறுவனமாகும். வர்த்தக அடிப்படையில் டேட்டாவின் தேவை அதிகரித்து வருவதால், புதிய தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய PON தொழில்நுட்பத்தின் சோதனையானது 10 Gbps, 25 Gbps, 50 Gbps மற்றும் 100 Gbps வேகத்தை வழங்குவதில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இது சுகாதாரம், தொழில்துறை பயன்பாடுகள், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு துறைகளில் தீர்வுகளை வழங்க இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications