பர்கர் கிங் என்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் 27 வருடங்களாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் இருந்தார் என்பதற்காக நெட்டிசன்கள் கொடுத்த சர்ப்ரைஸ் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊழியர்கள் என்றால் ஏதாவது காரணம் கூறி விடுமுறை எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் ஒரு ஊழியர் 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்பதற்காக அவரது நிறுவனம் எதுவுமே செய்யவில்லை என்றாலும் நெட்டிசன்கள் பரிசு மழையை பொழிந்துள்ளனர்.
27 வருடங்கள் விடுமுறை இல்லை
பர்கர் கிங் என்ற நிறுவனத்தின் ஊழியர் கெவின் ஃபோர்டு என்பவர், தான் பணி செய்த 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத அவருக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒரு சின்ன பரிசை மட்டும் வழங்கியது. இதனால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.
கெவின் ஃபோர்டு
இந்த நிலையில் கெவின் ஃபோர்டு மகள் செரினா என்பவர் தனது தந்தைக்காக ஏதாவது செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் 27 வருடமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத தனது தந்தையான பர்கர் கிங் ஊழியர் கெவின் ஃபோர்டு அவர்களுக்கு நிதி திரட்ட முடிவு செய்தார்.
நெட்டிசன்கள் தாராளம்
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டதை பார்த்து நெட்டிசன்கள் பலர் போட்டி போட்டுக் கொண்டு கெவின் ஃபோர்டுக்கு பணத்தை அள்ளி வழங்கினர். GoFundMe என்ற அமைப்பின் மூலம் கெவின் ஃபோர்டு மகள் செரினா இந்த தொகையை திரட்டினார்.
ரூ.1 கோடி நன்கொடை
பிரபல நகைச்சுவை நடிகர் டேவிட் ஸ்பேட் என்பவர் முதல் நபராக தனது பங்காக ரூபாய் 5000 டாலர் கொடுத்ததாக தெரிகிறது. அதன்பின் கெவின் ஃபோர்டு சேவையை பாராட்டி நெட்டிசன்கள் தாராளமாக நிதி வழங்கியதால், ஒரு சில நாட்களில் ஒரு கோடி ரூபாய் சேர்ந்துவிட்டதை அறிந்த கெவின் ஃபோர்டு மகள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டார்.
தந்தைக்கு மகள் நன்றி
தனக்கும் தனது உடன்பிறப்புகளுக்கு கடந்த 27 வருடங்களாக உழைத்த தனது தந்தைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நிதி திரட்ட ஏற்பாடு செய்ததாக கெவின் போடு மகள் செரீனா GoFundMe பக்கத்தில் தெரிவித்துள்ளார். 27 வருடங்களில் அவர் ஒரு நாள் கூட தனது வேலையை தவறவிட்டதில்லை என்றும் 27 ஆண்டுகளாக அவர் என்னையும் எனது மூத்த சகோதரியையும் அன்பாக காப்பாற்றினார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நிறுவனத்தின் சிறிய பரிசு
அவருடைய 27 வருட முழுமையான வருகைக்காக அவரது நிறுவனம் ஒரு சிறிய பரிசு மட்டுமே கொடுத்த நிலையில் நெட்டிசன்கள் அவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி ஒரு கோடிக்கும் மேல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications