இன்றைய இளம் தலைமுறையினர், குறிப்பாக Generation Z (Gen Z) என அழைக்கப்படுபவர்கள், நேரடியாக பேசுவது மற்றும் எதையும் சுருக்கமாகத் தெரிவிப்பது வழக்கமாக உள்ளது. ஆனால், இதுதான் சில சமயங்களில் மூத்த நிர்வாகிகள் மற்றும் நிறுவன மேலாளர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு அந்த வகையில், இளநிலை பணியாளர் (intern), திடீரென மேலாளருக்கு ஒரு விடுமுறை மெசேஜ் அனுப்புகிறார்.
அதில், "நான் சமீப காலமாக vibe பண்ணவில்லை. இதனால், லீவ் எடுத்துக்குறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த மேலாளர் வியந்து, அந்த அனுபவத்தை ரெடிட் தளத்தில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் "நான் ஒரு AI ஸ்டார்ட் அப்பில் வேலை செய்றேன். என்னிடம் 3 Gen Z இன்டெர்ன்கள் வேலை பார்க்குறாங்க. அவர்களை சமாளிப்பது என்பது ஒவ்வொரு நாளும் எனக்கு தனி அனுபவம் தான்.

அதில் இருக்கும் ஒருவர் லீவ் கேக்குற மாதிரி ஒரு மெயில் அனுப்பிருக்காங்க. என்னுடைய 20 வருட வேலை அனுபவத்தில இப்படி யாரும் லீவ் கேட்ருக்க மாட்டாங்க" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், Gen Z இளைஞர்கள் தங்களது உணர்வுகளையும் தேவைகளையும் நேர்மையாக பகிர்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதான் அடுத்த தலைமுறைக்கான தனிச் சிறப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இறுதியில், அந்த மேலாளர் இன்டெர்னின் லீவ் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்.
அந்த இளைஞர் எழுதியிருந்த மெயிலில், "வேலை ரொம்ப ஃபுல்லா இருக்கு, என் energy-யும் கொஞ்சம் சரியில்லாத மாதிரி இருக்கு. அதனால எனக்கு அந்த 'vibe' கிடைக்கலை. July 28 முதல் 30 வரை லீவ் போறேன்... pls என்ன மிஸ் பண்ணாதீங்க" என்று குறிப்பிட்டிருந்ததாக அந்த நபர் கூறியுள்ளார்.
இது ஒரு சாதாரண leave request போலத்தான் இருந்தது. அதனுடன் அந்த இன்டெர்ன், தனது upcoming trip-க்கான booking slip-ஐயும் இணைத்திருந்தார் என்று அந்த மேலாளர் கூறியுள்ளார். இந்த நேரடி அணுகுமுறையை அந்த மேலாளருக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தாலும், பின்னர் Gen Z ஊழியரின் நேர்மையை பாராட்டி, விடுமுறைக்கு ஒப்புக்கொண்டார்.
இதை பார்த்த ரெடிட் பயனர்கள், "இது தான் Gen Z தனிச்சிறப்பு. நேர்மையானது மற்றும் நகைச்சுவையுடனும் உள்ளது. Formal mail-கு பதிலா friend-க்கு அனுப்புற மாதிரி feel இருக்கு" என்று தெரிவித்துள்ளனர். மற்றொரு குழுவினர், "இந்தத் தலைமுறையினர் தங்களது உணர்வுகளைத் திறமையாகத் தெரிவிக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிலர், முந்தைய தலைமுறை பயன்படுத்தும் மரியாதையுடன் கூடிய முறையை ஒப்பிட்டு, இது ஒரு புதிய தலைமுறையின் கலாச்சார மாற்றம் என்று நினைக்கிறார்கள். முன்பு ஒருவர் லீவ் கேட்கும்போது, "மிகவும் நன்றியுடன், பணிவுடன்" என்ற வார்த்தைகள் வழக்கமாக இருந்தன. ஆனால், இப்போது "Energy கொஞ்சம் off-ஆ இருக்கு... vibe feel ஆகல" என்று நேரடியாக சொல்வது புதிய பாணியாக உள்ளது.
இளம் தலைமுறை உணர்வுகளை மறைக்காமல் வெளிப்படையாக பேசுகிறார்கள். அதை நேர்மையாகவும், ஆளுமையுடனும் பார்த்து சமாளிக்க, நிர்வாகத்திற்கே ஒரு புதிய அணுகுமுறை தேவைப்படுகிறது என்றும் சிலர் கூறி வருகின்றனர். "நான் Gen Z தலைமுறையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அவர்கள் தங்களது மனநிலையும் தேவைகளையும் திறமையாகப் பகிர்கிறார்கள்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"இது உண்மையிலேயே icon-level leave message. எல்லாரும் Gen Z-யிடம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும். குறிப்பாக என் கணவர், கடந்த 2 மாதமா ஒரு leave கூட எடுக்கல" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். "Gen Z-க்கு இப்படிப் பேசத் துணிச்சல் வருது. ஏனெனில் அவர்கள் நம்ம அனுபவிச்ச மாதிரி வாழ்க்கை போராட்டங்களை சந்திக்கல. அவர்களுக்கு வசதியான சூழ்நிலையில் வளர்ந்த அனுபவம் அதிகம்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications