இன்போசிஸ் நிறுவனம் வெளியான இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக தேவைப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கர்நாடகாவில் மிகப்பெரிய வளாகத்தை கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இன்போசிஸ் நிறுவனத்தின் ஒரு செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கும் ஆலைகள் அலுவலகங்களை அமைப்பதற்கும் தள்ளுபடி விலையில் நிலங்களை வழங்குகின்றன. அப்படி இன்போசிஸ் நிறுவனம் கர்நாடகாவில் அலுவலகம் அமைக்கும் போது கர்நாடக மாநில அரசு தள்ளுபடி விலையில் நிலத்தை இன்போசிஸ் நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது.

இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனம் தங்கள் பெயரில் இருந்த ஒரு நிலத்தை அண்மையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது . இதுதான் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் நிறுவனத்திற்காக கர்நாடக அரசு தள்ளுபடி விலையில் தந்த நிலத்தை அந்த நிறுவனம் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்த்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கையை மாவட்ட தொகுதியின் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவில் இன்போசிஸ் நிறுவனம் அத்திபள்ளியில் 53.56 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை பூரவாங்கரா நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளது, 250 கோடி ரூபாய்க்கு இந்த வர்த்தகம் நடந்துள்ளது என்ற செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அரசு தள்ளுபடி விலையில் இந்த நிலத்தை வழங்கி இருக்கிறது ,அந்த நோக்கத்திற்காக இன்போசிஸ் நிறுவனம் அந்த நிலத்தை பயன்படுத்தவில்லை என்றால் அரசிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும், அதை விற்பனை செய்வதற்கான உரிமை இன்போசிஸ் நிறுவனத்துக்கு கிடையாது அதுவும் தற்போதுள்ள கமர்சியல் விலையில் விற்பனை செய்திருக்கிறார்கள் ,இந்த நிலத்தை உடனடியாக கர்நாடகா அரசிடம் ஒப்படைத்து விடுங்கள் என கார்த்தி சிதம்பரம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான மோகந்தாஸ் பை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அளித்துள்ள பதிலில் இது அரசு வழங்கிய நிலம் அல்ல , இது ஒரு போலியான தகவல் என குறிப்பிட்டிருக்கிறார் . இன்போசிஸ் நிறுவனம் தான் நேரடியாக இந்த நிலத்தை வாங்கியது, தற்போது அந்த நிலத்திற்கான தேவை இல்லை என்பதற்காக திரும்ப விற்பனை செய்கிறோம் என குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்டாக விசாரிக்கப்படும் விஷயமாக இது மாறியுள்ளது. சிலர் இன்போசிஸுக்கு ஆதரவாகவும் சிலர் இன்போசிஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?



Click it and Unblock the Notifications