கொரோனா தொற்று ஏற்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டபோது சக்கை போடு போட்ட எட்டெக் நிறுவனமான பைஜூஸ் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் திவால் நிலையில் இருக்கும் இந்த நிறுவனத்தில் பல ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை.
நிதி நெருக்கடி, முதலீட்டாளர்களின் அதிருப்தி என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் சில ஊழியர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்காதது குறித்து சோசியல் மீடியா தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் தனது விரக்தியை பகிர்ந்த ஒரு ஊழியருக்கு, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான பைஜூ ரவிந்திரன் கண்டிப்பாக சம்பளம் வழங்கப்படும் என்று பதில் அளித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி இந்த வார தொடக்கத்தில் தான் செய்த தவறுக்காக தனது லிங்க்டின் பக்கத்தில் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். 45 வயதான பைஜூ ரவிந்திரன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவர் பங்குகளை விற்று தனது குடும்பத்தினருடன் லாபத்தை பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை பைஜூ ரவிந்திரன் மறுத்துள்ளார்.
மாறாக அனைத்து பணமும் பைஜூஸ் நிறுவனத்தில் தான் மறு முதலீடு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். பைஜூ ரவிந்திரன் தனது பதிவில் தான் மீண்டும் திரும்பி வருவேன் என்று கூறியிருந்தாலும், மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாதது மற்றும் அவர் துபாய்க்கு தப்பி சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சேர்ந்து ஊழியர்களை கவலை அடைய வைத்துள்ளது.
இதனால் பைஜூஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் சரமாரியாக கேள்விகளை முன் வைத்துள்ளனர். அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ரவீந்திரன் பதிவிட்ட லிங்க்டின் பதிவின் கமெண்ட் பாக்ஸில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
கௌசிக் லாடே என்ற ஊழியர், "உங்களுடைய ஆர்வத்தை நாங்கள் கேட்கிறோம். ஆனால் அது எங்களுடைய பில்களை செலுத்தாது. பைஜூஸை உருவாக்கிய ஊழியர்களான எங்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகிறோம். அதோடு எங்களுக்கு பிஎப் தொகையும் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனத்துடன் நாங்கள் நிலைத்து நின்றோம். எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இப்போது உங்களிடம் போராடி வருகிறோம். பைஜூசை உருவாக்கியவர்களை அமைதியாக துன்புறுத்த வேண்டாம். உங்கள் வார்த்தைகள் ஊக்கம் அளித்தாலும், உங்கள் செயல்கள் தான் இங்கு முக்கியம்", என்று பதிவிட்டிருந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த ஊழியருக்கு பதில் அளித்த பைஜூ ரவீந்திரன், "பில்கள் செலுத்தப்படும். மறு வருகை நிகழும். நிலுவைத் தொகை தீர்க்கப்படும். உடனடியாக இல்லை ஆனால் கண்டிப்பாக நடக்கும். நான் எனக்காக மட்டும் இங்கு போராடவில்லை. அதற்காக அதுவரையில் நீங்கள் என் வார்த்தைகளை நம்ப வேண்டாம். நான் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்" என்று பதிலளித்திருந்தார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications