2024-ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வழங்கிய துறைகளாக சில முக்கிய துறைகள் உருவெடுத்துள்ளன. அவற்றுள் இன்டர்நெட் மற்றும் இ-காமர்ஸ் துறைகளும் அடங்கும். இந்தத் துறைகள் அனைத்து வேலைகளிலும் அதிக சம்பளத்தை வழங்கி, சிறந்த சம்பளம் வழங்கும் துறைகளாக மாறியுள்ளன. அதிகரித்த இன்டர்நெட் தேவை மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வருகை, டிஜிட்டல் கட்டண முறை ஆகியவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ள சீனியர் ஊழியர்கள் வருடத்திற்கு 37 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
ரெண்ட்ஸ்டாட் இந்தியா என்ற பணியமர்த்தல் நிறுவனத்தின் அறிக்கையில், பல்வேறு துறையின் வளர்ச்சி திறமையான தொழில் முனைவோருக்கான தேவையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு சீனியர் ஊழியர்கள் ரூ.36.5 லட்சம் வரை ஆண்டு வருமானமாக பெற்றுள்ளனர். 2023-ஆம் ஆண்டில் கன்சல்டண்டுகள் அதிக சம்பளம் பெற்று முதலிடம் வகித்தனர். ஆனால் 2024-ஆம் ஆண்டில் இன்டர்நெட் மற்றும் இ-காமர்ஸ் துறையினர் சிலர் இந்த ஊதியத்தை மிஞ்சி வருமானம் பார்த்ததாக தெரிவித்துள்ளது.

அதோடு வெளியான அறிக்கையில் 2024 முதல் 2025-ஆம் ஆண்டில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை மீண்டும் வளர்ந்து வருவதை தெரிந்து கொள்ள முடிகிறது. தற்போது நுட்பமான திறன்களை கொண்ட ஊழியர்கள் அதிக ஊதியம் பெற்று வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல 2024-ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வழங்கிய பிற துறைகளும் உள்ளன. அதன்படி BFSI துறை, எனர்ஜி, கன்ஸ்ட்ரக்சன், ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகளிலும் சம்பளம் அதிகரித்துள்ளது. இந்த துறைகளில் பணிபுரியும் திறமையான தொழிலாளர்கள் மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது அதிக ஊதியத்தை பெற்றுள்ளனர். இந்திய அரசின் "வீக்சித் பாரத் 2047" திட்டத்தின் கீழ் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்காக அரசு எண்ணற்ற விஷயங்களை செய்து வருகிறது. இந்த துறைகள் அரசின் நோக்கத்தை நிறைவு செய்வதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.
சுகாதாரத்துறை நடுத்தர ஊழியர்கள் மற்றும் மூத்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் முன்னணியில் உள்ளது இந்த துறை 43.95 லட்சம் முதல் லட்சம் வரை சம்பளம் வழங்கியுள்ளனர். ஆராய்ச்சி, புதிய மருந்து கண்டுபிடிப்பு, நோய் அறிதல், டேட்டா அனாலிடிக்ஸ், மெடிக்கல் டூரிசம் ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதோடு திறமையான ஊழியர்களுக்கான சிறந்த நகரமாக பெங்களூர் உள்ளது. உற்பத்தி, சில்லறை விற்பனை, ஐடி உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் மிகவும் அதிக சம்பளம் பெறும் நபர்கள் இங்கு உள்ளனர். பெங்களூரில் ஜூனியர் லெவல் பணிகளுக்கு சராசரியாக ரூ.7.2 லட்சம் வரை ஆண்டு வருமானம் வழங்கப்படுகிறது. நடுத்தர நிலை ஊழியர்களுக்கு ரூ.19 லட்சம் வரை வழங்கப்படுகிறது. மேலும் மூத்த ஊழியர்களுக்கு ரூ. 36.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications