வெறுமனே AI தெரிஞ்சா போது.. இனி இவர்களுக்கு தான் டிமாண்ட்.. மாசம் 3-4 லட்சம் சம்பாதிக்கும் அளவுக்கு வாய்ப்பு!

ஏஐ தான் இனி எதிர்காலம் என்றாகிவிட்டது, முன்பெல்லாம் ஒரு கம்பியூட்டர் லேங்வேஜ் தெரிந்துக்கொண்டு, அதில் ஜாம்பவானக இருந்தால் போதும் என்ற நிலை இருந்து.

தற்போது ஏஐ தொழில்நுட்பம் வந்த காரணத்தால் ஒருவர் பல கம்பியூட்டர் லேங்வேஜில் கோடிங் எழுதுவதை தாண்டு ஒவ்வொருவரும் ஃபுல் ஸ்டாக் டெவலப்பராகவும், ஆல் ரவுண்டராகவும் மாறி வருகின்றனர். ஆனால் இது போதாது என்பது தான் தற்போதைய பிரச்சனை.

வெறுமனே AI தெரிஞ்சா போது.. இனி இவர்களுக்கு தான் டிமாண்ட்.. மாசம் 3-4 லட்சம் சம்பாதிக்கும் அளவுக்கு வாய்ப்பு!

தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் வெறுமனே ஏஐ நிபுணர்களை தேர்வு செய்ய விரும்பவில்லை, இதற்கு மாறாக வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து, அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் வண்ணம் இயங்கும் ஏஐ இன்ஜினியர்களுக்கு தான் அதிக முக்கியதுவம் கொடுத்து வருகிறது.

முன்பெல்லாம் அமெரிக்க டெக் நிறுவனங்களில் தான் forward deployed engineers மற்றும் agentic AI engineer-களுக்கு டிமாண்ட் இருந்தது ஆனால் முதல் இந்தியாவிலும் இதற்கான டிமாண்ட் வந்துள்ளது.

Also Read

சமீபத்தில் 9 துறையில் சுமார் 200 நிறுவனங்களில் CIEL HR நிறுவனம் செய்த ஆய்வில் பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்கள் நேரடியாக எதிர்கொள்ளும் இன்ஜினியர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் ஊழியர்களை அதிகளவில் தேர்வு செய்ய துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தை ஆர்பிஜி குரூப், வால்வோ, EY, சாவில்ஸ் இந்தியா என பல நிறுவனங்கள் உறுதி செய்துள்ளது. இதுக்குறித்து CIEL HR நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா கூறுகையில் தற்போது நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை எப்படி லாபகரமாக பயன்படுத்த முடியும் என்பதை அறிந்த ஊழியர்களை தான் அதிகளவில் விரும்பி தேர்வு செய்கின்றனர்.

இவர்கள் மூலம் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எளிதாக சமாளிக்க முடியும், சாப்ட்வேர் சேவையின் டெலிவரி, பணி முறையை மாற்றி எளிதாக்கி நிறுவனத்திற்கும், வர்த்தகத்திற்கும் வேல்யூ உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Recommended For You

மேலும் கடந்த ஒரு வருடத்தில் இந்திய நிறுவனங்களில் agentic AI engineer-களுக்கான டிமாண்ட் என்பது 260 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் forward-deployed engineer-களுக்கான டிமாண்ட் 130 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

அதேபோல் இப்பதவியில் அமர்த்தப்படும் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுப்பதில் நிறுவனங்கள் தயங்குவது இல்லை, இத்தகைய பணிகளுக்கு 50 லட்சம் முதல் 1 கோடி வரையிலான சம்பளத்தில் தற்போது பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் அமர்த்தி வருகிறது.

ஏஐ முக்கியம் தான் ஆனால் அதை எப்படி லாபகரமாக பயன்படுத்தி நிறுவனத்திற்கு உதவ முடியும் என்பதை இவர்கள் செய்வதால் இவர்களுக்கான முக்கியதுவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் இந்த பிரிவில் மாஸ் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியுமா என்றால் வாய்ப்புகள் குறைவு, ஆனால் காலப்போக்கில் இதுவும் அதிகரிக்கலாம் என்பது தான் நிதர்சனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+