சமீபத்திய மாதங்களாகவே ஐடி நிறுவனங்கள் பலவும் அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கித் தவித்து வருகின்றன. முன்னதாக இன்ஃபோசிஸ், விப்ரோ, கேப்ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்கள் ஆஃபர் லெட்டர்களை வழங்கியிருந்தாலும், பணிக்கு அழைக்கவில்லை. தொடர்ந்து தாமதபடுத்தி வருகின்றன.
சில நிறுவனங்கள் தங்களது ஆஃபர் லெட்டர்களை கேன்சலும் செய்துள்ளன. குறிப்பாக கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்த மாணவர்கள் பல காலாண்டுகள் ஆகியும் திரும்ப அழைக்கப்படவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக இருந்து வருகின்றது.
டெலாய்ட்
நாட்டின் முன்னணி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ மட்டும் ஆஃபர் லெட்டர் வழங்கிவிட்டு தாமதப்படுத்தவில்லை. டெலாய்ட் நிறுவனமும் வேலைக்காக தேர்வு செய்யதவர்களை, பல மாதங்களாக திரும்ப அழைக்கவில்லை. குறிப்பாக அக்டோபர் 2021ல் தேர்தெடுக்கப்பட்டவர்களும் நிறுவனத்தின் அழைப்புகாக காத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.
1 வருடம் காத்திருப்பு
இது குறித்து மன உளைச்சளுக்கு ஆளான ஒருவர், அக்டோபர் 2021ல் டெலாய்ட் நிறுவனத்திடம் இருந்து ஆஃபர் லெட்டரை பெற்றதாகவும், ஆனால் தற்போது வரையில் நிறுவனத்தில் இணையும் தேதிக்காக காத்திருப்பதாகவும் BT தகவல்கள் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு வருடத்திற்கும் மேல் ஆகியும் அவர்கள் பணிக்காக இன்னும் நிறுவனத்தில் இணையாமல் காத்துக் கொண்டுள்ளனர்.
ஏமாற்றுகிறாயா?
2021ல் ஆஃபர் லெட்டர் கிடைத்த ஒருவர், இன்று வரையில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஊழியர்களின் உறவினர்களும் குடும்பத்தினரும் உண்மையில் வேலை கிடைத்ததா? அல்லது ஏமாற்றுகிறாயா? என கேட்கிறார்கள். நான் அவர்களை ஏமாற்றுவதாக நினைக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பிரெஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள்
ஏற்கனவே புதியதாக தேர்தெடுக்கப்பட்டவர்களே காத்திருக்கும் நிலையில், தற்போது வெளியே வரும் பிரெஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள் இன்னும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சிலர் காத்திருந்தாலும் வேலை உறுதி செய்யப்படுமா? அல்லது பல மாத காத்திருப்புக்கு பிறகு மற்ற நிறுவனங்களைப் போல் ஆஃபர்களை கேன்சல் செய்யுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வேலை கிடைத்தும் பயனில்லை
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதை போல, ஐடி பிரெஷ்ஷர்களுக்கு வேலை கிடைத்தும், அலுவலகம் சென்று பணிபுரிய முடியாத சூழல் இருந்து வருகின்றது. சொல்லப்போனால் பிரபலமான ஐடி நிறுவனங்களில் வேலை கிடைத்தும் இணைய முடியவில்லையே. இனி இணைவோமா? என்ற சந்தேகமும் ஐடி ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications